Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிபா உலகக் கோப்பை... கோஸ்டாரிகாவின் மிரட்டல் ஆட்டம் தொடருமா.... செர்பியாவுடன் மோதுகிறது!

Costa Rica to meet serbia in the fifa world cup

சமாரா: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் இ பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் செர்பியாவுடன் கோஸ்டாரிகா மோத உள்ளது. கடந்த உலகக் கோப்பையில் மிரள வைத்த கோஸ்டாரிகாவின் ஆட்டம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. இ பிரிவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் செர்பியாவுடன் கோஸ்டாரிகா விளையாட உள்ளது.
----
பிரிவு இ
கோஸ்டாரிகா - செர்பியா
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி மாலை 5.30 மணி
----
கடந்த உலகக் கோப்பையில் மூன்று முன்னாள் சாம்பியன்களான இத்தாலி, உருகுவே, இங்கிலாந்து அணிகளுடன் கோஸ்டாரிகா இடம்பெற்றது. பிரிவு சுற்றில் கடைசி இடம்தான் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்தாலி, உருகுவேயை வென்று அந்தப் பிரிவில் முதலிடத்தில் பிடித்த கோஸ்டாரிகா காலிறுதியில் தோல்வியடைந்தது.

கடந்த உலகக் கோப்பையில் பெனால்டி ஷூட்அவுட்டை தவிர்த்து பார்த்தால், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்துடன், கோஸ்டாரிகா மட்டுமே ஒரு ஆட்டத்திலும் தோல்வி அடையவில்லை.

செர்பியா கடைசியாக விளையாடிய இரண்டு உலகக் கோப்பைகளில் பிரிவு சுற்றில் 6ல் ஐந்தில் தோல்வியடைந்தது. ஜெர்மனிக்கு எதிராக மட்டுமே வென்றது.
--
முக்கிய வீரர்கள்

செர்பியா - குறைந்த போட்டிகளில் விளையாடி இருந்தாலும் நடுகள வீரரான செர்ஜெஜ் மிலின்கோவிக் சாவிக் கவனிக்கப்படும் வீரர்களில் ஒருவராக உள்ளார். இந்த உலகக் கோப்பையில் அவருடைய செயல்பாடுகளே, அவர் மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிக் அல்லது ஜூவன்டஸ் அணிகளில் எதற்கு செல்வார் என்பதை நிர்ணயிக்கும்.

கோஸ்டாரிகா - ரியல் மாட்ரிட் அணி மற்றும் கோஸ்டாரிகாவின் கோல் கீப்பரான கெய்லான் நவாஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
---
1998ல் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் விளையாடிய செர்பியா, கடந்த உலகக் கோப்பைக்கு தகுதிப் பெறவில்லை. பல திறமையான வீரர்கள் இருந்தாலும் செரியா பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக முக்கியப் போட்டிகளில் செர்பியா பங்கேற்கவில்லை. இந்த நிலையில், உலகக் கோப்பைக்கு நுழைந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் கடந்த உலகக் கோப்பையில் காலிறுதிக்கு நுழைந்து அசத்தியது கோஸ்டாரிகா. உலகக் கோப்பையில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியடையாத கோஸ்டாரிகா, அதை ஆறாக மாற்றுவதற்கு தயாராக உள்ளது.

Story first published: Sunday, June 17, 2018, 2:09 [IST]
Other articles published on Jun 17, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+