Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

92 ஆண்டு கால காத்திருப்புக்கு முடிவு.. நியூசிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையில் எகிப்து முதல் வெற்றி

வான்கூவர்: பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் ஜி பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில், நியூசிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய எகிப்து அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் எகிப்து அணி பதிவு செய்யும் முதல் வெற்றி இதுவாகும். இதன் மூலம் 92 ஆண்டு கால நீண்ட காத்திருப்புக்கு எகிப்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

வான்கூவரில் நடைபெற்ற இப்போட்டியில், ஆட்டத்தின் முதல் பாதியில் நியூசிலாந்து அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் ஃபின் சர்மன் கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை தந்தார். இதனால் முதல் பாதியில் எகிப்து அணி பின்தங்கியிருந்தது. ஆனால், இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்த எகிப்து அணிக்கு, 58வது நிமிடத்தில் மோஸ்டபா ஜிகோ கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.

Egypt Beat New Zealand 3-1 for Historic First-Ever FIFA World Cup Win to End 92-Year Wait

இதனைத் தொடர்ந்து எகிப்தின் நட்சத்திர வீரர் முகமது சலா ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் ஒரு அபாரமான கோல் அடித்து அணியை 2-1 என முன்னிலை பெறச் செய்தார். ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் சலா எடுத்த கார்னர் கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி மாற்று வீரர் மஹ்மூத் ட்ரெசெகுவெட் தலையால் முட்டி கோல் அடித்தார். இதன் மூலம் எகிப்து அணி 3-1 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியை உறுதி செய்தது.

கடந்த 1934 ஆம் ஆண்டு முதன்முறையாக உலகக் கோப்பையில் அறிமுகமான எகிப்து அணி, அதற்குப் பின் பங்கேற்ற உலகக் கோப்பை தொடர்களில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. இந்த வரலாற்று வெற்றியின் மூலம் குரூப் ஜி பிரிவில் 4 புள்ளிகளுடன் எகிப்து முதலிடத்திற்கு முன்னேறி, அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

சவுதியை 4-0 என வீழ்த்திய ஸ்பெயின்.. உலகக் கோப்பையில் புதிய சாதனை.. யமால், ஒயர்சாபல் அதிரடி

சவுதியை 4-0 என வீழ்த்திய ஸ்பெயின்.. உலகக் கோப்பையில் புதிய சாதனை.. யமால், ஒயர்சாபல் அதிரடி

எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹோசம் ஹாசன் பேசுகையில், "மைதானம் முழுவதும் எகிப்து ரசிகர்கள் நிறைந்திருந்ததால் கெய்ரோ மைதானத்தில் விளையாடுவது போன்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். எகிப்து அணி தனது கடைசி லீக் போட்டியில் ஈரானை எதிர்கொள்கிறது.

Story first published: Monday, June 22, 2026, 10:44 [IST]
Other articles published on Jun 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+