For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவா அணியுடன் மோதும் நார்த்ஈஸ்ட் யுனைடெட்.. வெற்றிக்கணக்கை துவக்க கோவா அணி தீவிரம்!

கோவா : ஐஎஸ்எல் 2020-21 சீசனின் 12வது போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் கோவா மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதவுள்ளன.

கோவாவின் படோர்டாவில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இன்னும் சிறிது நேரத்தில் போட்டி துவங்கவுள்ளது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடி 4 புள்ளிகளுடன் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. கோவா அணி ஒரு புள்ளியுடன் 7வது இடத்தில் உள்ளது.

12வது போட்டி

12வது போட்டி

ஐஎஸ்எல் 2020-21 தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் அனைத்து போட்டிகளும் கோவாவின் மைதானங்களில் திட்டமிடப்பட்டுள்ளன. இன்றைய 12வது போட்டியில் எப்சி கோவா மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதவுள்ளன.

7வது இடத்தில் எப்சி கோவா

7வது இடத்தில் எப்சி கோவா

தொடரில் 4 புள்ளிகளுடன் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி 2வது இடத்திலும் எப்சி கோவா அணி ஒரு போட்டியில் டிரா செய்து ஒரு புள்ளியுடன் 7வது இடத்திலும் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் கோவா அணியில் இணையவுள்ள பிரான்டன் பெர்னான்டஸ் சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் தீவிரம்

இரு அணிகளும் தீவிரம்

இதனிடையே, இந்த போட்டியில் வெல்வதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் முன்னேற நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி திட்டமிட்டுள்ளது. கோவாவின் படோர்டாவில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இன்னும் சிறிது நேரத்தில் போட்டி துவங்கவுள்ள நிலையில் போட்டி இரு அணிகளுக்கிடையில் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி பெற தீவிரம்

வெற்றி பெற தீவிரம்

மும்பை சிட்டி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் கோவா அணி தீவிரமாக விளையாடிய போதிலும் வெற்றியை பெற முடியவில்லை. இதனிடையே முன்னதாக நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு எதிரான 12 போட்டிகளில் 5 போட்டிகளில் கோவா அணி வெற்றி பெற்றுள்ளது. அதே தீவிரத்துடன் இன்றைய போட்டியிலும் கோவா அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, November 30, 2020, 18:41 [IST]
Other articles published on Nov 30, 2020
English summary
FC Goa have won five of the previous 12 games played against NorthEast United
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+