For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

காலையிலேயே அதிர்ச்சி செய்தி..இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு தடை.. இனி இந்திய அணி பங்கேற்க முடியுமா

மும்பை: இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு ஃபிஃபா எனப்படும், உலக கால்பந்து சம்மேளனம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக ஃபிஃபா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஃபிஃபா கவுன்சில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

இதனால் இந்திய கால்பந்து அணி, இனி சர்வதேச போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இது அநியாயத்தின் உச்சம்.. இந்திய கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம்.. எவ்வளவு சம்பளம் தெரியுமா?இது அநியாயத்தின் உச்சம்.. இந்திய கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம்.. எவ்வளவு சம்பளம் தெரியுமா?

அதிரடி முடிவு

அதிரடி முடிவு

இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு, அதன் சம்பந்தம் இல்லாத வேறு அமைப்புகளின் தலையீடு இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்திய கால்பந்து சம்மேளனம், தனது முடிவை சுயமாக எடுக்கும் அங்கீகாரத்தை இழந்துவிட்டதால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 U17 மகளிர் உலகக்கோப்பை

U17 மகளிர் உலகக்கோப்பை

இந்த நிலையில், இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் ஒரு கமிட்டியை உருவாக்கி, வேறு அமைப்பின் தலையீடு இல்லை என்பதை உறுதி செய்யும் வரை இந்த தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிஃபாவின் தடையால் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலககோப்பை கால்பந்து போட்டி இம்முறை நடத்தப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல்

தேர்தல்

இந்த தொடரின் எதிர்காலம் மற்றும் இந்திய கால்பந்து அணி போட்டிகளில் பங்கேற்பது குறித்து ஃபிஃபா குழு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்திடம் தொடர்பில் இருப்பதாகவும் ஃபிஃபா அறிவித்துள்ளது, இந்திய கால்பந்து சம்மேளனத்தில் தற்போது தலைவர் பொறுப்பு காலியாக உள்ளது.

காரணம்

காரணம்

இது தொடர்பான தேர்தல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அப்போது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய கால்பந்து சம்மேளனத்தை நிர்வாகிக்க ஒரு குழுவை உருவாக்கியது. இந்த குழு, வேறு சில நபர்களை நியமித்தது. இதற்கு ஃபிஃபா கடும் எச்சரிக்கை விடுத்த நிலையில், தனி நபர்களை நியமிக்கும் முடிவிலிருந்து அந்த குழு பின்வாங்கியது. இதனையடுத்து தேர்தலை நடத்தி எப்போது இந்திய கால்பந்து சம்மேளனம் இயங்குகிறதோ , அப்போது தான் தடை விலக்கி கொள்ளப்படும்.

Story first published: Tuesday, August 16, 2022, 9:55 [IST]
Other articles published on Aug 16, 2022
English summary
FIFA Bans AIFF and Indian football team wont participate in games இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு தடை.. இனி இந்திய அணி பங்கேற்க முடியுமா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X