For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'ஃபீஃபா' வரலாற்றிலேயே முதல் முறையாக தெ. அமெரிக்க மண்ணில் வென்ற ஐரோப்பிய அணி ஜெர்மனி!

By Siva

ரியோடி ஜெனிரோ: ஃபீஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தியதன் மூலம் 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே அணியை அதே கோல் கணக்கில் வீழ்த்திய பெருமையை ஜெர்மனி பெற்றுள்ளது. மேலும் தென் அமெரிக்க மண்ணில் உலகக் கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய நாட்டு அணி ஜெர்மனி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபீஃபா கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் இருக்கும் மரகானா ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடந்தது.

இறுதிப் போட்டியின் வெற்றி பற்றி பார்ப்போம்.

கோல்

கோல்

ஆட்டம் துவங்கியவுடன் மெஸ்ஸி கோல் அடிப்பார் என்று அர்ஜென்டினா ரசிகர்களும், ஜெர்மனி வீரர்கள் கோல் அடிப்பார்கள் என்று அந்நாட்டு ரசிகர்களும் நகத்தை கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். ஆனால் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

மிஸ்

மிஸ்

அர்ஜென்டினா வீரர்கள் கோல் அடிக்க முயற்சி செய்து அது 4 தடவை மிஸ்ஸானது. அதே போன்று ஜெர்மனி வீரர்களும் 3 முறை கோல் அடித்து அது மிஸ்ஸானது.

ச்சே

ச்சே

இப்படி வீரர்கள் கோல்களை மிஸ் பண்ணியதை பார்த்த ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். அடடடா இப்படி கோட்டை விடுகிறார்களே என்று நினைத்தனர்.

கூடுதல் நேரம்

கூடுதல் நேரம்

90 நிமிடத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதோடு ரசிகர்களின் டென்ஷனும் ஏறியது.

அதிசயம்

அதிசயம்

யாருமே கோல் அடிக்க மாட்டேன் என்கிறார்களே என்று ரசிகர்கள் இருக்கைகளின் நுனியில் அமர்ந்திருந்தபோது தான் சப்ஸ்டிடியூட்டாக வந்த மரியோ கோட்சே ஆட்டத்தின் 113வது நிமிடத்தில் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் நச்சென்று ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றி பெறச் செய்தார்.

கோட்சேவா?

கோட்சேவா?

ஜெர்மனி அணியில் கோட்சே கோல் அடித்து அந்த அணி வெற்றி பெறும் என்று யாரும் கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால் அது தான் நடந்தது.

1986

1986

கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்த ஆண்டு மூன்றாவது முறையாக அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் மோதின. 1986ம் ஆண்டு முதன்முறையாக இறுதிப் போட்டியில் மோதியபோது அர்ஜென்டினா ஜெர்மனியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

1990

1990

1990ம் ஆண்டு நடந்த கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மீண்டும் அர்ஜென்டினா-ஜெர்மனி அணிகள் மோதின. இதில் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வெற்றி பெற்றது.

24 ஆண்டுகள் கழித்து

24 ஆண்டுகள் கழித்து

24 ஆண்டுகள் கழித்து தற்போது தான் அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு தேர்வானது. அதுவும் ஜெர்மனியுடன் 24 ஆண்டுகள் கழித்து இறுதிப் போட்டியில் மோதியது.

மீண்டும் 1990

மீண்டும் 1990

1990ம் ஆண்டை போலவே தற்போதும் ஜெர்மனி அர்ஜென்டினாவை அதுவும் அதே 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தென் அமெரிக்கா

தென் அமெரிக்கா

தென் அமெரிக்க மண்ணில் இதுவரை எந்த ஐரோப்பிய நாட்டு அணியும் கால்பந்து உலகக் கோப்பையை வென்றது இல்லை. ஆனால் அதை மாற்றி தென் அமெரிக்காவில் உலகக் கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய நாட்டு அணி என்ற பெருமையை பெற்றுள்ளது ஜெர்மனி.

சொந்த மண்

சொந்த மண்

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா அதே கண்டத்தில் உள்ள பிரேசிலில் விளையாடி தோல்வி அடைந்துள்ளது. இதனால் சொந்த கண்டத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரை வெல்லத் தவறிய முதல் தென் அமெரிக்க அணி அர்ஜென்டினா என்ற அவப்பெயரை பெற்றுள்ளது.

பெருமையைத் தவற விட்ட பிரேசில், அர்ஜென்டினா

பெருமையைத் தவற விட்ட பிரேசில், அர்ஜென்டினா

இதற்கு முன்பு 1930ல் உருகுவேயில் நடந்த போட்டியில் உருகுவேயும், 50ல் பிரேசிலில் நடந்த தொடரில் உருகுவேயும், 62ல் சிலியில் நடந்த தொடரில் பிரேசிலும், 78ல் அர்ஜென்டினாவில் நடந்த தொடரில் அர்ஜென்டினாவும் கோப்பையை வென்றுள்ளன. தற்போது பிரேசிலில் நடந்த தொடரில் அந்தப் பெருமையை தக்க வைக்க பிரேசிலும் சரி, அர்ஜென்டினாவும் சரி தவற விட்டு விட்டன.

இத்தாலியின் சாதனை சமன்

இத்தாலியின் சாதனை சமன்

இதற்கு முன்பு இத்தாலி மட்டுமே 4 கோப்பைகளை வென்ற ஒரே ஐரோப்பிய அணியாக இருந்து வந்தது. தற்போது அந்த சாதனையை ஜெர்மனி சமன் செய்துவிட்டது.

Story first published: Monday, July 14, 2014, 10:23 [IST]
Other articles published on Jul 14, 2014
English summary
Germany has repeated the 1990 finals victory in 2014 by defeating Argentina by 1-0 in Brazil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+