Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

FIFA WC: மாற்று வீரராக வந்தும் கோல் அடித்த மெஸ்ஸி.. ஜோர்டானை வீழ்த்தி அர்ஜென்டினா அபார வெற்றி

டல்லாஸ்: ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரின் குரூப் ஜே பிரிவின் கடைசி லீக் போட்டியில், அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜோர்டானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியின் மூலம் அர்ஜென்டினா அணி லீக் சுற்றின் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று கம்பீரமாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஏற்கனவே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டதால், அர்ஜென்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி அணியில் 9 மாற்றங்களைச் செய்து மாற்று வீரர்களுக்கு வாய்ப்பளித்தார். ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் ஜியோவானி லோ செல்சோ ஒரு அபாரமான ஃபிரீ-கிக் மூலம் அர்ஜென்டினா அணியின் முதல் கோலை அடித்தார். நடப்பு உலகக்கோப்பையில் மெஸ்ஸியைத் தவிர்த்து அர்ஜென்டினாவுக்காக கோல் அடித்த வீரர் இவர்தான். தொடர்ந்து கிடைத்த பெனால்டி வாய்ப்பை லாடாரோ மார்டினெஸ் கோலாக மாற்ற, அர்ஜென்டினா 2-0 என முன்னிலை பெற்றது.

FIFA WC Argentina Beats Jordan Comfortably Lionel Messi Sets New Record to Face Cape Verde Next

ஆட்டத்தின் 60-வது நிமிடத்திற்குப் பிறகு மாற்று வீரராகக் களமிறங்கிய கேப்டன் லியோனல் மெஸ்ஸி, 80-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் 3-வது கோலை அடித்தார். இதன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை மெஸ்ஸி படைத்தார். அவர் பிரான்ஸின் ஜஸ்ட் ஃபோன்டைன் மற்றும் பிரேசிலின் ஜெய்ர்சின்ஹோ ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார். உலகக்கோப்பையில் மெஸ்ஸியின் மொத்த கோல்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் ஜோர்டான் அணி ஒரு ஆறுதல் கோல் அடித்த போதிலும், அர்ஜென்டினா 3-1 என வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டது. குரூப் ஜே பிரிவில் அர்ஜென்டினா முதலிடத்தையும், சாசா கலாஜ்ட்சிக்கின் கடைசி நிமிட கோலால் ஆஸ்திரியா இரண்டாம் இடத்தையும் பிடித்தன. அல்ஜீரியா சிறந்த 3-வது இடத்தைப் பிடித்த அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி.. தொடர்ந்து 7 உலகக்கோப்பை போட்டிகளில் கோல்

ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி.. தொடர்ந்து 7 உலகக்கோப்பை போட்டிகளில் கோல்

ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் அர்ஜென்டினா அணி, கேப் வெர்டே அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி வரும் வெள்ளிக்கிழமை மியாமியில் நடைபெறவுள்ளது.

Story first published: Sunday, June 28, 2026, 10:53 [IST]
Other articles published on Jun 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+