Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

FIFA: ஒரு நியாயம் வேண்டாமா? குராசாவோவை கதறவிட்ட ஜெர்மனி.. 7 கோல் அடித்து உலகக் கோப்பையில் சாதனை

ஹூஸ்டன்: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குராசாவோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், 7-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி அணி புதிய வரலாற்றுச் சாதனையுடன் தனது உலகக் கோப்பை பயணத்தைத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற குரூப் இ பிரிவு ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி மற்றும் முதன்முறையாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ள குராசாவோ அணிகள் மோதின. கடந்த 2018 மற்றும் 2022 உலகக் கோப்பைகளின் முதல் ஆட்டங்களில் முறையே மெக்சிகோ மற்றும் ஜப்பானிடம் தோற்று ஏமாற்றமளித்த ஜெர்மனி, இம்முறை அந்த மோசமான தொடக்கம் பெறும் அணி என்ற பெயரை உடைத்தெறிந்துள்ளது. அத்துடன் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணிகள் பட்டியலில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி ஜெர்மனி முதலிடத்தைப் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

FIFA WC Germany Blasts Curacao 7-1 to Break World Cup Records and End Opening-Match Jinx

ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்திலேயே ஜெர்மனியின் பெலிக்ஸ் நமேச்சா முதல் கோல் அடித்து அசத்தினார். எனினும், ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் குராசாவோ அணியின் லிவானோ கொமெனென்சியா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்து அதிர்ச்சியளித்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஜெர்மனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 38வது நிமிடத்தில் நிகோ ஸ்லாட்டர்பெக் ஒரு கோலும், முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் காய் ஹாபர்ட்ஸ் பெனால்டி மூலம் ஒரு கோலும் அடிக்க, முதல் பாதியில் ஜெர்மனி 3-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி தொடங்கிய 69 விநாடிகளிலேயே ஜமால் முசியாலா 4வது கோலை அடித்தார். தொடர்ந்து நதானியேல் பிரவுன் (68வது நிமிடம்), டெனிஸ் உண்டாவ் (78வது நிமிடம்) மற்றும் ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் காய் ஹாபர்ட்ஸ் தனது 2வது கோலை அடித்தார். இதனால் ஜெர்மனி 7-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.

24 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பை ஆடவந்த துருக்கியை 2 கோல் அடித்து அனுப்பிய ஆஸ்திரேலியா

24 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பை ஆடவந்த துருக்கியை 2 கோல் அடித்து அனுப்பிய ஆஸ்திரேலியா

இப்போட்டியில் ஜெர்மனி அணி மொத்தம் 26 முறை கோல் அடிக்க முயற்சித்தது குறிப்பிடத்தக்கது. அறிமுகப் போட்டியில் படுதோல்வியைச் சந்தித்த குராசாவோ அணி, தனது அடுத்த ஆட்டத்தில் ஜூன் 20 அன்று ஈக்வடாரை எதிர்கொள்ள உள்ளது. வெறும் 158,000 மக்கள் தொகை கொண்ட குராசாவோ அணியை ஜெர்மனி மனம் போன போக்கில் பந்தாடி இந்த வெற்றியை பெற்றுள்ளது.

Story first published: Monday, June 15, 2026, 7:28 [IST]
Other articles published on Jun 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+