Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

FIFA: ஜப்பான் கோச் கையில் இருக்கும் அந்த மர்ம டைரி என்ன? சமூக வலைதளங்களில் பரவும் 'டெத் நோட்' மீம்ஸ்

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக ஜப்பான் அணி 2-2 என்ற கணக்கில் டிரா செய்ததைத் தொடர்ந்து, ஜப்பான் அணியின் பயிற்சியாளர் ஹாஜிமே மோரியாசுவின் மர்ம டைரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஜப்பான் அணி இருமுறை பின் தங்கிய போதும், ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் மாற்று வீரர்களின் அதிரடி உத்திகளால் 2-2 என டிராவை பதிவு செய்தது.

ஜப்பான் அணி எப்போதெல்லாம் மைதானத்தில் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்கிறதோ, அப்போதெல்லாம் ஆடுகளத்தின் ஓரமாக நின்றபடி பயிற்சியாளர் மோரியாசு தனது டைரியில் ஏதோ தீவிரமாக எழுதுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதன் பிறகு அவர் செய்யும் உத்திகளால் ஜப்பான் அணி வெற்றியை நோக்கித் திரும்புகிறது.

FIFA What is Inside Japan Coach s Mysterious Notebook Death Note Memes Buzz After World Cup Comeback

இதை வைத்து ரசிகர்கள் ஜப்பான் பயிற்சியாளரிடம் இருப்பது சாதாரண டைரி அல்ல, அது புகழ்பெற்ற ஜப்பானிய அனிமே கார்ட்டூனான 'டெத் நோட்'-இல் வரும் புத்தகம் என்று நகைச்சுவையாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த கற்பனைக் கதையின்படி, அந்த மர்மப் புத்தகத்தில் யாருடைய பெயரை எழுதினாலும் அவர்கள் இறந்துவிடுவார்கள்.

நெதர்லாந்துக்கு எதிராக ஜப்பான் அணி போராடிய போது, மோரியாசு தனது டைரியில் ஏதோ எழுதினார். அதன் பிறகு அவர் செய்த அதிரடி மாற்றங்களால் ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஜப்பான் அணி கோல் அடித்து போட்டியை டிரா செய்தது. இதைப் பார்த்த ரசிகர்கள், நெதர்லாந்து அணி வீரர்களின் பெயரை மோரியாசு தனது 'டெத் நோட்' டைரியில் எழுதி ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார் என்று ஜாலியாக பதிவிட்டு வருகின்றனர்.

FIFA: நெதர்லாந்துக்கு அதிர்ச்சியளித்த ஜப்பான்.. விடாமுயற்சியால் உலகக் கோப்பையில் த்ரில்லர் டிரா

FIFA: நெதர்லாந்துக்கு அதிர்ச்சியளித்த ஜப்பான்.. விடாமுயற்சியால் உலகக் கோப்பையில் த்ரில்லர் டிரா

உண்மையில் அமானுஷ்ய டைரி எதுவும் அவரிடம் இல்லை. அவர் மிகச்சிறந்த முறையில் உத்திகளை வகுக்கும் திறமை படைத்தவர் என்பதால், உடனுக்குடன் தனது திட்டங்களை டைரியில் குறித்து வைத்து வீரர்களுக்கு அறிவுரை வழங்குகிறார். ஜப்பானின் இந்த அசாத்திய கம்பேக் மற்றும் 'டெத் நோட்' மீம்ஸ் 2026 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Monday, June 15, 2026, 9:43 [IST]
Other articles published on Jun 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+