Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி அணி நாடு திரும்பியது; உற்சாக வரவேற்பு

பெர்லின்: கால்பந்து உலகக்கோப்பையை வென்ற ஜெர்மனி அணி நாடு திரும்பியது. வெற்றி வீரர்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

20-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கடந்த மாதம் 12-ந்தேதி பிரேசிலில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனியும், அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

ரியோடி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

24 ஆண்டுகளுக்குப்பின்னர்

24 ஆண்டுகளுக்குப்பின்னர்

ஜெர்மனியின் 22 வயது இளம் வீரர் மரியோ கோட்ஸே 113-வது நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். இதன் மூலம் சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனி மீண்டும் உலக சாம்பியன் ஆனது. அந்த அணிக்கு ரூ.210 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

4-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

நாடு திரும்பிய அணி

நாடு திரும்பிய அணி

இந்நிலையில் வெற்றிக்கோப்பையுடன் ஜெர்மனி வீரர்கள் இன்று நாடு திரும்பினர். ரியோ டி ஜெனிரோவில் இருந்து பெர்லின் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திரண்ட ரசிகர்கள்

திரண்ட ரசிகர்கள்

வெற்றிக் கோப்பையுடன் வரும் வீரர்களை வரவேற்க இன்று காலை முதலே ரசிகர்கள் திரண்டு வர ஆரம்பித்தனர். பிரண்டன்பர்க் கேட்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டதால் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தன.

வாழ்த்து முழக்கம்

பின்னர் வெளியில் வந்தபோது, விமான நிலையத்தின் வெளியில் வெள்ளமென திரண்டிருந்த மக்கள் வீரர்களை வாழ்த்தி கோஷமிட்டனர்.

Story first published: Wednesday, July 16, 2014, 9:11 [IST]
Other articles published on Jul 16, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+