Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7-1: ஆக்டோபஸை விட சரியாக ஜெர்மனியின் வெற்றியை கணித்த நியூசிலாந்து நபர்!

பிரேசிலியா: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதி ஆட்டங்கள் பரபரப்பாக நடந்துவரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தின் சரியான ஸ்கோரை கணித்து பெட்டிங்கில் வெற்றி பெற்றுள்ளார் ஒருவர்.

ஜெர்மன் மற்றும் பிரேசிலுக்கு இடையேயான நேற்றைய ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை அடித்துப் பிய்த்து எறிந்துள்ளது ஜெர்மன்.

FIFA World Cup 2014: Man predicts 7-1 scoreline, wins bet

இந்நிலையில் இந்த ஸ்கோரை சரியாக கணித்து வென்றுள்ளார் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் என்று "தி இன்டிபென்டெண்ட்" தெரிவித்துள்ளது.

"இந்த கோல் கணக்கினை சரியாக பதிவு செய்த அந்த ஒருவர் கண்டிப்பாக அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும். நடப்பதைக் கூறுவதில் வல்லவராக இருக்க வேண்டும். வெறும் 119 ரூபாய்க்கு அவர் கட்டிய பெட் அவருக்கு 30,000 ரூபாயை வென்று கொடுத்துள்ளது" என்று அதன் செய்தி தெரிவித்துள்ளது.

5-0 என்று இருந்த ஸ்கோரானது அரை மணி நேரங்களில் 7-0 என்று உருவெடுத்தது. கடைசி நேரத்தில்தான் பிரேசில் தன்னுடைய முதல் கோலினைப் பதிவு செய்தது.

"ஆஸ்திரேலியாவின் பெட்டிங் இணையதளமான டிஏபி, கிட்டதட்ட இதே ஸ்கோரை பதிவு செய்த 9,700 மற்றவர்கள் இதில் வெற்றி அடையவில்லை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினா - நெதர்லாண்ட் ஆட்டத்தில் ஜெயிக்கும் அணியுடன் ஜெர்மனி இரண்டாவது அரை இறுதிச் சுற்றினை வரும் 13 ஆம் தேதி அன்று ரியோ டி ஜெனிரோ களத்தில் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 10, 2014, 10:49 [IST]
Other articles published on Jul 10, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+