2018ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு தகுதிபெறாத கேமரூன் அணி, கத்தார் உலகக்கோப்பை மூலம் மீண்டும் களம் புகுந்துள்ளது. 8வது முறையாக உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் கேமரூன் அணி, தனது அடையாளத்தை இடம்பெற வைக்கும் என்று பார்க்கப்படுகிறது. பிரேசில், ஸ்விட்சர்லாந்து, செர்பியா அணிகள் உள்ள குரூப் பிரிவில் கேமரூன் அணி உள்ளது.