உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: ஜெர்மனி- அர்ஜென்டினா பலப்பரீட்சை!
ரியோடி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டியில் ஜெர்மனி மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையை வெல்லப்போகும் அணியை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை மறுநாள் நள்ளிரவு 12.30 மணிக்கு ரியோடி ஜெனிரோவில் உள்ள மரகானா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

முன்னாள் சாம்பியன்கள் மோதல்
இதில் முன்னாள் சாம்பியன்கள் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியும், தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவும் மோதுகின்றன.

3வது முறை மோதல்
உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்த அணிகளும் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது இது 3வது முறையாகும்.

86-ல் அர்ஜென்டினா
1986 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.

90-ல் ஜெர்மனி
1990 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி பழி தீர்த்துக் கொண்டது.

ஜெர்மனி சாதிக்குமா?
இப்போட்டியில் வென்றால் தென் அமெரிக்கா கண்டத்தில் நடந்த போட்டியில் உலக கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற சாதனையை ஜெர்மனி அணி படைக்கும்.


Click it and Unblock the Notifications