Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை கால்பந்து: 4வது முறையாக கோப்பையை வென்றது ஜெர்மனி!!

ரியோடிஜெனிரோ: உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை 4 வது முறையாக வென்றது ஜெர்மனி.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அர்ஜெர்டினா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.

கோல் அடிக்காமலே....

கோல் அடிக்காமலே....

ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் தாக்குதல் ஆட்டத்தை வேகப்படுத்திய ஜெர்மனி, அர்ஜென்டினாவுக்கு நெருக்கடி கொடுத்தது.

கூடுதல் நேரம்

கூடுதல் நேரம்

இதனால் 90 நிமிட முடிவிலும் இரு அணியும் கோல் அடிக்காததால் ஆட்ட நடுவர் கூடுதல் நேரம் வழங்கினார்.

மீண்டும் கூடுதல் நேரம்..

மீண்டும் கூடுதல் நேரம்..

முதல் பாதி கூடுதல் நேரத்திலும் அர்ஜென்டினா - ஜெர்மனி அணிகள் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலையில் இருந்தன. இதனையடுத்து இரண்டாம் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

கோல் அடித்த ஜெர்மனியின் மரியோ கோட்சே

கோல் அடித்த ஜெர்மனியின் மரியோ கோட்சே

ஆட்ட முடிவுக்கு 8 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், 113-வது நிமிடத்தில் ஜெர்மனியின் மரியோ கோட்சே ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல்கணக்கில் வென்று 4-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது ஜெர்மனி.

4வது முறை கோப்பையை வென்ற ஜெர்மனி

4வது முறை கோப்பையை வென்ற ஜெர்மனி

இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி 4 வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதில் 3 முறை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுடன் மோதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லுப்தான்சாவின் சலுகை

உலகக் கோப்பை போட்டிகளை ஒட்டி லுப்தான்சா விமான நிறுவனம் சலுகைகளை அறிவித்துள்ளது

Story first published: Monday, July 14, 2014, 12:14 [IST]
Other articles published on Jul 14, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+