Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காயத்தால் கதறி அழுத நெய்மார்... அதிர்ச்சியில் புலம்பும் பிரேசில்!

போர்டெலஸா: பிரேசில் சூப்பல் ஸ்டார் நெய்மார் நடப்பு உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடரில் தொடர்ந்து ஆட முடியாத நிலை ஏற்பட்டிருப்பது பிரேசில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவுடனான போட்டியின்போது கொலம்பிய வீரர் ஜூவான் காமிலோ ஜுனிகா, நெய்மார் மீது கடுமையாக மோதியதில், ஜுனிகாவின் கால், நெய்மாரின் முதுகில் பட்டு கடும் காயத்தையும் எலும்பு முறிவையும் ஏற்படுத்தி விட்டது.

இதனால் மைதானத்தில் விழுந்த நெய்மார் வலியில் கதறினார். அவர் தொடர்ந்து போட்டிகளில் ஆட முடியாது என்று கூறி விட்டதால் பிரேசில் அணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

காலிறுதிப் போட்டியில் பிரேசில் வென்று விட்டாலும் கூட நெய்மார் இல்லாத நிலையில் எப்படி அது ஜெர்மனியை வருகிற வெள்ளிக்கிழமையன்று அரை இறுதிப் போட்டியில் சந்தித்து வெல்லப் போகிறது என்ற பெரும் கவலையில் பிரேசிலியர்கள் மூழ்கியுள்ளனர்.

2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி

2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி

பிரேசில், கொலம்பியா இடையிலான போட்டியின்போது பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி அரை இறுதிக்குத் தகுதி பெற்றது.

நெய்மார் சோகம்

நெய்மார் சோகம்

ஆனால் இந்த வெற்றியை ஓரம் கட்டி விட்டது நெய்மாரின் காயம். அவர் தொடர்ந்து ஆட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் போட்டித் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். இதனால் பிரேசில் அதிர்ச்சி அடைந்துள்ளது.

3வது எலும்பில் முறிவு

3வது எலும்பில் முறிவு

நெய்மாருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டதில் அவரது முதுகில் 3வது வெர்ட்டபிரா எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

என்ன செய்யப் போகிறது பிரேசில்

என்ன செய்யப் போகிறது பிரேசில்

பிரேசில் அணியில் பல ஸ்டார் வீரர்கள் இருந்தாலும் கூட நெய்மாரைத்தான் அது முழுமையாக நம்பியிருந்தது. இதுவரை நடந்த போட்டிகளில் நெய்மார் 4 கோல்களை அடித்துள்ளார். தனது அணியை அரை இறுதிக்கு கொண்டு வந்ததில் அவருக்கும் முக்கியப் பங்கு உண்டு.

பயிற்சியாளர் கடும் ஆவேசம்

பயிற்சியாளர் கடும் ஆவேசம்

பிரேசில் அணியின் பயிற்சியாளரான லூயிஸ் பிலிப்பி ஸ்கோலரி, நெய்மார் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து குறி வைத்தனர்

தொடர்ந்து குறி வைத்தனர்

இதுகுறித்து அவர் கூறுகையில், நெய்மாரை மற்ற அணிகள் குறி வைத்து ஆடுகின்றன என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். இன்று நெய்மாரைக் காயப்படுத்தி ஆட முடியாத அளவுக்கு கொலம்பியா செய்து விட்டது. அவரை வேட்டையாடி விட்டனர் என்று குமுறல் வெளியிட்டுள்ளார்.

கேப்டனுக்கும் நேரம் சரியில்லை

கேப்டனுக்கும் நேரம் சரியில்லை

இதற்கிடையே, பிரேசில் அணியின் கேப்டன் தியாகோ சில்வா ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரால் அரை இறுதிப் போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காலிறுதியில் வெல்ல உதவியவர் தியாகோ

காலிறுதியில் வெல்ல உதவியவர் தியாகோ

முன்னதாக கொலம்பியாவுடனான போட்டியின்போது முதல் கோலைப் போட்டவர் தியாகோதான். அடுத்த கோலை டேவிட் லூயிஸ் போட்டார்.

6 கோல் போட்டு சோகத்துடன் வெளியேறிய ரோட்ரிக்ஸ்

6 கோல் போட்டு சோகத்துடன் வெளியேறிய ரோட்ரிக்ஸ்

மறுபக்கம் கொலம்பிய சூப்பர் ஸ்டார் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் இந்த உலகக் கோப்பைத் தொடரில் 6 கோல்களைப் போட்டு முதலிடத்தைப் பிடித்தும், கொலம்பியா அரை இறுதிக்கு முன்னேறாத சோகத்தில் அழுது புலம்பியபடி காணப்பட்டார்.

2002 காட்சி

2002 காட்சி

2002ம் ஆண்டு பிரேசிலும், ஜெர்மனியும்தான் இறுதிப் போட்டியில் மோதின. அதில் பிரேசில் கோப்பையை தட்டிச் சென்றது. தற்போது இரு அணிகளும் அரை இறுதியில் சந்திக்கப் போகின்றன. ஜெர்மனி பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நெய்மார் வேறு இல்லாததால், ஜெர்மனி அணி பெரும் உற்சாகமடைந்துள்ளது.

2வது முறை

2வது முறை

ஜெர்மனியை உலகக் கோப்பைப் போட்டியில் பிரேசில் சந்திப்பது இது 2வது முறையாகும்.

தொடர்ந்து 4வது முறையாக ஜெர்மனி

தொடர்ந்து 4வது முறையாக ஜெர்மனி

ஜெர்மனி அணி தொடர்ந்து 4வது முறையாக அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

2வது அரை இறுதியில் அர்ஜென்டினா- நெதர்லாந்து

2வது அரை இறுதியில் அர்ஜென்டினா- நெதர்லாந்து

2வது அரை இறுதிப் போட்டிக்கு அர்ஜென்டினாவும், நெதர்லாந்தும் தகுதி பெற்றுள்ளன.

Story first published: Sunday, July 6, 2014, 15:19 [IST]
Other articles published on Jul 6, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+