ஆஸ்திரேலியாவை 4 கோல்கள் அடித்து சுருட்டியது ஜெர்மனி

வலிமை வாய்ந்த ஜெர்மனியை, ஆஸ்திரேலியா சிரமப்படுத்தும் என கணிக்கப்பட்டிருந்ததால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அதற்கு நேர் மாறாக ஆட்டத்தை முழுமையாக தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு விட்டது ஜெர்மனி.
நடப்புத் தொடரில் இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளிலேயே இதுதான் மிகவும் வலிமையான, உறுதியான, ஆணித்தரமான ஆட்டமாக அமைந்தது என்பதில் சந்தேகமே இல்லை.
ஆட்டம் தொடங்கிய விநாடி முதல் முடியும் வரை ஜெர்மானியர்கள் பின்னி எடுத்து விட்டனர். கேப்ன் பிலிப் லஹாம், வளரும் நட்சத்திரங்களான மெசுத் ஓஸில், தாமஸ் முல்லர் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் தடுப்பரண்களை தகர்த்து விட்டனர்.
லூகாஸ் போடோல்ஸ்கி, மிரஸ்லோவ் குளோஸ், முல்லர், பிரேசிலில் பிறந்தரான ஸ்டிரைக்கர் ககாவ் ஆகியோர் ஜெர்மனி அணிக்கான கோல்களை அடித்தனர்.
தங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை இவர்கள் சற்றும் வீணடிக்கவில்லை. இந்தப் போட்டியின் மூலம் டி பிரிவில் ஜெர்மனி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications