Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐரோப்பாவின் நெதர்லாந்தை வெல்லுமா ஆசியாவின் ஜப்பான்?

Netherlands
டர்பன்: இன்று நடைபெறும் இ பிரிவு ஆட்டத்தில் ஜப்பான் அணி, நெதர்லாந்தை சந்திக்கிறது.


காமரூடன் நடந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற தெம்பில் உள்ள ஜப்பான் இன்று தங்களை விட வலிமை வாய்ந்த நெதர்லாந்தை வெல்ல ஆர்வத்துடன் களம் காண்கிறது.


கடந்த பத்து மாதங்களில் ஜப்பானும், நெதர்லாந்தும் மோதுவது இது 2வது முறையாகும். கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நட்பு ரீதியிலான போட்டியில்,3-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்றது.


இருப்பினும் இன்றைய போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்த ஜப்பான் தயாராக உள்ளது. இன்றைய போட்டியில் வெல்லும் என நெதர்லாந்து கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜப்பான் அதை அவ்வளவு எளிதாக ஏற்பட விடாது என்று நம்பலாம்.


நெதர்லாந்து தனது முதல் போட்டியில் டென்மார்க்கை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. ஜப்பானோ, காமரூனை வீழ்த்தியதன் மூலம் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் வென்ற பெருமையைப் பெற்றது. எனவே இன்றைய போட்டி நிச்சயம் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.


மேலும் இன்றைய போட்டியில் வெல்லும் அணி இந்த குரூப்பில் முதலிடத்தைப் பிடிக்கும். அப்படிப் பிடித்தால், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியை சந்திக்காமல் தப்பி விடலாம்.


முதல் போட்டியில் அசத்திய கெய்சுகே ஹோன்டா,இன்றைய போட்டியிலும் ஜப்பானுக்கு பேருதவியாக இருப்பார் என நம்பலாம். அவருக்கு சரியான போட்டியாக நெதர்லாந்தின் வெஸ்லி ஸ்னீடர் விளங்குவார்.


நெதர்லாந்தை ஜப்பான் வீழ்த்தினால் அவ்வாறு செய்த முதல் ஆசிய அணி என்ற பெருமை கிடைக்கும். செய்யுமா ஜப்பான்?

Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+