Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேலே போய் திரும்பி வந்த பந்து.. அவசரப்பட்ட கீப்பரால் தோற்ற அணி.. வைரலாகும் பெஸ்ட் பெனால்டி கிக்!

தாய்லாந்து: தாய்லாந்தில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியில் இந்த வருடத்தின் மிக வித்தியாசமான பெனால்டி கோல் ஒன்று அடிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் கடைசியில் நடந்த பெனால்டி கிக்கில் பந்து வெளியே சென்றதால் கோல் கீப்பர் சந்தோசத்தில் கொண்டாடியிருக்கிறார். ஆனால் மேலே சென்ற பந்து மீண்டும் வந்து வலைக்குள் விழுந்து கோலாக மாறியிருக்கிறது. இதனால் எதிரணி போட்டியில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

தாய்லாந்தில் கடந்த சில நாட்களாக உள்ளூர் U-18 கோப்பை போட்டி நடந்து வருகிறது. இதில் கடந்த சனிக்கிழமை மிக முக்கியமான போட்டி ஒன்று நடைபெற்றது. இந்த போட்டியில் உள்ளூர் அணிகளான பாங்காக் ஸ்போர்ட்ஸ் கிளப்பும், சாத்ரி ஆங்தோங் கிளப்பும் மோதின. இந்த போட்டி தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருந்தது

 A football player in Thailand done a bizarre penalty goal!

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சாத்ரி அணி தொடக்கத்தில் இருந்தே போட்டியில் முன்னிலையில் இருந்தது. கடைசியாக சில நிமிடத்திற்கு முன் பாங்காக் அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பை விட்டால் போட்டியை விட்டு பாங்காக் அணி வெளியேற வேண்டிய நிலை இருந்தது.

இந்நிலையில், பாங்காக் அணி வீரர் பெனால்டி பந்தை அடித்தார். ஆனால் பந்து கோல் கம்பத்தில் பட்டு மேலே பறந்தது. இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த எதிர் அணி கோல்கீப்பர் வெற்றி கொண்டாட்டத்தில் கோல் கம்பத்தை விட்டு வெளியே ஓடினார். ஆனால் அதற்குள் பந்தானது கீழே பட்டு மீண்டும் வலைக்குள் விழுந்தது. இதனால் பாங்காக் அணிக்கு ஒரு கோல் கிடைத்தது. அந்த அணி வெற்றி பெற்றது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை 2 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

Story first published: Wednesday, October 25, 2017, 15:23 [IST]
Other articles published on Oct 25, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+