For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடுத்த கட்டத்தில் உலகக் கோப்பை கால்பந்து: முதலாவது காலிறுதியில் ஜெர்மனி-பிரான்ஸ் நாளை மோதல்!

By Mathi

ரியோடிஜெனிரா: உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. முதலாவது காலிறுதிப் போட்டியில் நாளை ஜெர்மனி, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றுப் போட்டிகளைத் தொடர்ந்து காலிறுதிக்கான தகுதி சுற்றுப் போட்டிகள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தன.

தகுதி பெற்ற அணிகள்

தகுதி பெற்ற அணிகள்

இதன் முடிவில் முன்னாள் சாம்பியன்கள் பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து, கொலம்பியா, பெல்ஜியம், கோஸ்டாரிகா ஆகிய நாடுகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

ஜெர்மனி, பிரான்ஸ் மோதல்

ஜெர்மனி, பிரான்ஸ் மோதல்

காலிறுதி ஆட்டங்கள் நாளை முதல் தொடங்குகின்றன. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடைபெறும் முதலாவது காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

3 முறை சாம்பியன் ஜெர்மனி

3 முறை சாம்பியன் ஜெர்மனி

உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி அணிகளில் ஜெர்மனியும் ஒன்று. இதுரை 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது ஜெர்மனி.

13வது முறையாக நுழையுமா?

13வது முறையாக நுழையுமா?

ஜெர்மன் அணி கடந்த 3 உலக கோப்பை போட்டிகளில் அரை இறுதிக்கு நுழைந்து இருந்தது. 13-வது முறையாக அரை இறுதியில் நுழைவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. ஜெர்மனி அணியைப் பொறுத்தவரையில் தாமஸ் முல்லர்தான் முன்னணியில் இருக்கிறார். ஒசில், கவாஸ்டிக்கர், ஹம்மல்ஸ், ஆந்த்ரே, கேப்டன் பிலிப் ஆகிய சிறந்த வீரர்களும் ஜெர்மனி அணியில் உள்ளனர்.

பிரான்ஸ் அணி

பிரான்ஸ் அணி

ஜெர்மனி அணிக்கு சவால் விடக்கூடிய அணிகளில் பிரான்ஸ் அணி முதன்மையானது. இந்த அணியில் கரீம் பென்சிமா நட்சத்திர வீரர். 1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 6-வது முறையாக அரை இறுதியில் நுழைவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

Story first published: Thursday, July 3, 2014, 13:44 [IST]
Other articles published on Jul 3, 2014
English summary
A European presence in the World Cup semifinals is assured as Germany and France meet at the Maracana on Friday, looking to shrug off stumbling wins in the second round that exposed frailties in both teams.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+