Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"உன்னால் முடியும் தம்ப்ரி".... கோல் போடுவதற்கு முன்பு கோட்சே காதில் "ஓதிய" பயிற்சியாளர்!

ரியோ டி ஜெனீரோ: ஜெர்மனி அணிக்கு 4வது உலகக் கோப்பையைப் பெற்றுத் தர உதவிய ஒரே ஒரு கோலைப் போட்ட மரியோ கோட்சே இன்று ஜெர்மனியின் ஹீரோவாகி விட்டார். ஆனால் அவர் கோல் போட பயிற்சியாளர் ஜோக்கிம் லோ கொடுத்த ஊக்கமும், ஒரு குட்டிப் பேச்சும்தான் காரணம் என்று தற்போது லோ வாயாலேயே தெரிய வந்துள்ளது.

கோலடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கோட்சேவுக்கு தான் கொடுத்த ஊக்கம் நிறைந்த பேச்சுதான் அவருக்கு உத்வேகத்தை அளித்ததாக லோ கூறியுள்ளார்.

இந்தக் கோப்பையை முடிவு செய்ய உன்னால் முடியும். தைரியமாக செயல்படு என்று காதில் கிசுகிசுப்பாக சொல்லி கோட்சேவுக்கு ஊக்கமூட்டினாராம் லோ. அதன் பிறகு புதுத் தெம்புடன் களத்தில் செயல்பட்ட கோட்சே ஜெர்மனிக்கு 4வது கோப்பையை பெற்றுத் தர உதவிய அந்த கோலைப் போட்டு ஜெர்மனி ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தார்.

லோ சொன்னது என்ன...

லோ சொன்னது என்ன...

இதுகுறித்து லோ கூறுகையில், ஓகே. இப்போது மெஸ்ஸியை விட நீ மிகச் சிறந்தவன் என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த உலகக் கோப்பையை முடிவு செய்ய உன்னால் முடியும். போ, போய் தைரியமாக ஆடு என்று நான் கோட்சேவிடம் கூறினேன்.

உன்னால் முடியும்

உன்னால் முடியும் "தம்ப்ரி"..

உன்னால் முடியும். உன்னிடம் அத்தனை திறமைகளும் உள்ளன. உன் மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் உள்ளது என்றும் நான் கோட்சேவிடம் கூறினேன் என்று கூறியுள்ளார் லோ.

குளோஸுக்குப் பதில் களம் இறங்கியவர்

குளோஸுக்குப் பதில் களம் இறங்கியவர்

உண்மையில் நேற்று சூப்பர் ஸ்டார் குளோஸுக்குப் பதிலாக கடைசி நேரத்தில் மாற்று வீரராக களம் இறக்கப்பட்டவர்தான் கோட்சே. 2வது கூடுதல் நேரம் முடிய 7 நிமிடங்கள் இருந்த நிலையில்தான் கடைசி நிமிடத்தில் கோலைப் போட்டு ஜெர்மனியை கரை சேர்த்து விட்டார் கோட்சே.

பெரும் விலைக்கு கிளப் மாறியவர்

பெரும் விலைக்கு கிளப் மாறியவர்

கிளப் அளவில் பேயர்ன் மூனிச் அணிக்காக ஆடி வந்தவர் கோட்சே. ஆனால் அந்த அணியின் முதல் சீசனில் ரெகுலர் வீரராக ஆட அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் மிகப் பெரிய சம்பளத்திற்கு அவரை போரஸ்ஸியா டார்ட்மன்ட் அணி விலைக்கு வாங்கியது. மிகவும் திறமை படைத்த வீரரான கோட்சே தற்போது ஜெர்மனிக்கு 4வது உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்து விட்டார்.

கஷ்டமாப் போச்சு பாஸ்...

கஷ்டமாப் போச்சு பாஸ்...

அந்த ஒரு கோல் குறித்து கோட்சே கூறுகையில், அது சாதாரண கோல் அல்ல. மிகவும் கஷ்டமானது. இந்த நேரத்தில் என் மீது நம்பிக்கை வைத்த எனது குடும்பத்தினர், எனது காதலி ஆகியோருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சந்தோஷமாக இருக்கிறது. கோப்பையை எனது கோல் பெற்றுக் கொடுத்தது கூடுதல் சந்தோஷம் தருகிறது என்றார் கோட்சே.

Story first published: Monday, July 14, 2014, 13:36 [IST]
Other articles published on Jul 14, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+