Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அச்சச்சோ, ஃபீஃபா கோப்பையை ஜெர்மனி வீரர்கள் சேதப்படுத்திட்டாங்களாம்!

பெர்லின்: பெர்லினில் நடந்த கொண்டாட்டத்தின்போது ஜெர்மனி வீரர்கள் ஃபீஃபா கால்பந்து உலகக் கோப்பையை சேதப்படுத்திவிட்டனர்.

பிரேசிலில் நடந்த ஃபீஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளில் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று ஜெர்மனி கோப்பையை கைப்பற்றியது. உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி அணி தங்கள் நாட்டுக்கு திரும்பி அதை கொண்டாடி வருகிறது.

Germany damage World Cup Trophy during celebrations in Berlin

இந்நிலையில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கால்பந்து அணியின் வெற்றிக் கொண்டாட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது உலகக் கோப்பை சேதம் அடைந்தது.

இது குறித்து ஜெர்மனி கால்பந்து சங்க தலைவர் உல்ப்காங் நீர்ஸ்பாக் கூறுகையில்,

உலகக் கோப்பையின் சிறு பகுதி உடைந்து விழுந்துவிட்டது. ஆனால் இது குறித்து கவலைப்பட வேண்டியது இல்லை. இதை சரி செய்யக்கூடும் வல்லமை படைத்தவர்கள் எங்களிடம் உள்ளனர். கோப்பையை யார் உடைத்தார்கள் என்று விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் விசாரணை முடிவு தெரியாமல் முடிந்தது என்றார்.

Story first published: Tuesday, July 22, 2014, 18:03 [IST]
Other articles published on Jul 22, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+