Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரையும் காணோமே.. நாம மட்டும் விளையாடிட்டிருக்கோம்.. பிரேசிலைக் "கலாய்க்கும்" கலகல வீடியோ!

லண்டன்: உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் முடிவடைந்த பின்னரும் அதன் தாக்கம் ஓயவில்லை போலும்.. பிரேசில்- ஜெர்மனி இடையேயான போட்டியை மையமாக வைத்து இன்டர்நெட்டில் ஒரு கலாய்ப்பு வீடியோ உலவி வருகிறது.

20வது உலகக் கோப்பை போட்டிகள் பிரேசில் நாட்டில் நடைபெற்று முடிவடைந்தன. இதில் அரை இறுதியில் 7-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி ஜெர்மன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்தப் போட்டியை வைத்துத்தான் இப்போது கலகலக்க வைத்து வருகிறார்கள் சில குசும்பர்கள்.

ஜெர்மனி சாம்பியன்

ஜெர்மனி சாம்பியன்

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஜெர்மன் கோப்பையைக் கைப்பற்றியது. ஜெர்மனி 4வது முறையாக உலகக் கோப்பை கால்பந்து சாம்பியனானது.

குசும்பு வீடியோ

குசும்பு வீடியோ

இந்த நிலையில் யூ டியூப்பில் குசும்பர்கள் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளனர். பிரேசிலுக்கு எதிராக 7 கோல் போட்டு ஜெர்மனி வென்ற போட்டியின் காட்சியை முன்வைத்து இந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.

பிரேசில் வீரர்களை காணலை

பிரேசில் வீரர்களை காணலை

இதில் என்ன விஷேசம் என்கிறீர்களா? வீடியோவில் ஜெர்மனி வீரர்கள்தான் விளையாடுகிறார்கள் சாரி கோல் அடித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு பிரேசில் வீரரைக் கூட காணலை..

எடிட் செய்துவிட்டு..

அதாவது பிரேசில் வீரர்கள், கோல்கீப்பர் என அனைவரையும் டிஜிட்டல் முறையில் எடிட் செய்துவிட்டு ஜெர்மனி வீரர்கள் மட்டுமே கோல் அடித்த காட்சிகளை இணைத்து வீடியோவாக்கி ஏற்றி விட்டிருக்கிறார்கள் குசும்பர்கள்..

இப்போது இணையத்தில் ஹிட்டடித்துக் கொண்டிருக்கிறது இந்த ஒன்மேன் கேம் ஷோ... சொன்னாலும் சொல்லாட்டியும் அப்படித்தானே நடந்தது!

Story first published: Tuesday, July 15, 2014, 12:24 [IST]
Other articles published on Jul 15, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+