Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது ரொம்பப் புதுஸ்ஸா இருக்கே... எல்லாமே 1.. ஜெர்மனியின் "நம்பர் ஒன்" சாதனை....!

பான்: ஜெர்மனி அணிக்கும் 1ம் எண்ணுக்கும் இடையே ஏதோ ரொம்பப் பொருத்தம் இருக்கும் போல. இருக்காதா பின்னே... அது கோப்பையை வென்ற போட்டிகளில் பார்த்தால் ஒரு கோல் வித்தியாச்தில்தான் கோப்பையைக் கைப்பற்றியுள்ளதை அறியலாம்.

இது எதார்த்தமாக நடந்தது என்றாலும் கூட இதுவும் ஒரு வகையில் சாதனையாக மாறியுள்ளது.

இதுவரை நான்கு முறை ஜெர்மனி கோப்பையை கைப்பற்றியுள்ளது. நான்கு இறுதிப் போட்டிகளிலும் அது ஒரு கோல் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளது.

முதல் கோப்பையில்

முதல் கோப்பையில்

1954ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் மேற்கு ஜெர்மனி என்ற பெயரில் ஜெர்மனி கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் அது ஹங்கேரியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. கோல் வித்தியாசம் ஒன்று.

74ல் 2வது கோப்பை

74ல் 2வது கோப்பை

1974ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் 2வது முறையாக கோப்பையைத் தட்டிச் சென்றது மேற்கு ஜெர்மனி. இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இதிலும் ஒரு கோல் வித்தியாசம்தான்.

1990 போட்டியில்

1990 போட்டியில்

கடைசியாக 1990ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இதே அர்ஜென்டைனாவைத்தான் இறுதிப் போட்டியில் வீ்ழ்த்தியது ஜெர்மனி. அப்போட்டியில் 1-0 என்ற கணக்கில் மேற்கு ஜெர்மனி வெற்றி பெற்று தனது 3வது உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

2014ல் மீண்டும் ஒரு கோல் வித்தியாசம்

2014ல் மீண்டும் ஒரு கோல் வித்தியாசம்

தற்போது 2014ல் நடந்த போட்டித் தொடரிலும் 1-0 என்ற ஒரு கோல் கணக்கில்தான் ஜெர்மனி வெற்றி பெற்றுள்ளது.

ஜெர்மனியாக முதல் முறை....

ஜெர்மனியாக முதல் முறை....

அதை விட முக்கியமாக முதல் மூன்று கோப்பைகளை அது மேற்கு ஜெர்மனி என்ற பெயரில்தான் வென்றிருந்தது. தற்போது ஒருங்கிணைந்த ஜெர்மனியாக முதல் முறையாக அது கோப்பையை வென்றுள்ளது.

ஆச்சரியமாக இருக்கிறதல்லவா....!

Story first published: Tuesday, July 15, 2014, 16:57 [IST]
Other articles published on Jul 15, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+