For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஃபிபா உலகக் கோப்பை.... நாக் அவுட்டில் 6 சாம்பியன்கள்.... ஜெர்மனி மட்டும் மிஸ்ஸிங்!

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றுகள் நாளை துவங்குகின்றன. இதில் முன்னாள் சாம்பியன்கள் 6 பேர் முன்னேறியுள்ளன. இத்தாலி உலகக் கோப்பைக்கே தகுதி பெறவில்லை. நடப்பு சாம்பியன் ஜெர்மனி ம

மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றுக்கு முன்னாள் சாம்பியன்களான 6 அணிகள் முன்னேறியுள்ளன. நடப்பு சாம்பியனான ஜெர்மனி மட்டுமே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறவில்லை. மற்றொரு முன்னாள் சாம்பியன் இத்தாலி உலகக் கோப்பைக்கு தகுதிபெறவில்லை.

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பையின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிகிறது. இந்த 32 நாடுகளில் இருந்து, 16 நாடுகள் அடுத்தக்கட்ட நாக் அவுட் சுற்றில் விளையாடும். அதில் வெற்றி பெறும் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

14ம் தேதி துவங்கிய லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், டி பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, இ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, எப் பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. எச் பிரிவில் இருந்து எந்தெந்த அணிகள் முன்னேறும் என்பது இன்று இரவு தெரியவரும்.

இந்த நிலையில், இந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறியது நடப்பு சாம்பியனான ஜெர்மனி. லீக் பிரிவில் மூன்று ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி, 2ல் தோல்வியுடன், பிரிவு சுற்றில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது.

வெளியேறியது ஜெர்மனி

வெளியேறியது ஜெர்மனி

நேற்று இரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ஜெர்மனி மிக சொதப்பலாக விளையாடியது. கடைசியில் தென்கொரியாவிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்த உலகக் கோப்பையில் மிகவும் மோசமாக விளையாடிய அணிகளில் ஜெர்மனிக்கே முதலிடம் கிடைக்கும்.

தொடர்ந்து மூன்றாவது முறை

தொடர்ந்து மூன்றாவது முறை

உலகக் கோப்பையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடப்பு சாம்பியன் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. 2006ல் உலகக் கோப்பையை வென்ற இத்தாலி, 2010ல் முதல் சுற்றில் வெளியேறியது. 2010ல் வென்ற ஸ்பெயின், 2014ல் வெளியேறியது. 2014ல் வென்ற ஜெர்மனி, தற்போது முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இதற்கு முன் 1998ல் உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ், 2002ல் முதல் சுற்றில் வெளியேறியது.

இத்தாலி விளையாடவில்லை

இத்தாலி விளையாடவில்லை

இதுவரை 8 நாடுகள் மட்டுமே உலகக் கோப்பையை வென்றுள்ளன. நான்கு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள இத்தாலி, தகுதிச் சுற்றில் தோல்வியடைந்து, இந்த உலகக் கோப்பையில் விளையாடவில்லை.

முன்னேறிய சாம்பியன்கள்

முன்னேறிய சாம்பியன்கள்

மற்ற 7 நாடுகளும் தகுதி பெற்றன. அதில் ஸ்பெயின், பிரான்ஸ், அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே, இங்கிலாந்து ஆகிய 6 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நடப்பு சாம்பியனான ஜெர்மனி மட்டுமே முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

Story first published: Thursday, June 28, 2018, 18:40 [IST]
Other articles published on Jun 28, 2018
English summary
Germany the only champion misses the second round of this world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+