Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10 வருஷம் திட்டம் போட்டு.. ஒரே ஒரு கோல் போட்டு.. "கொட்டாவி" விடாம லோ சொல்றதைக் கேளுங்க!!

ரியோ டி ஜெனீரோ: உலகக் கோப்பையை வெல்ல 10 வருடமாகவே திட்டம் போட்டு வந்தார்களாம் ஜெர்மனி அணியினர். அந்த அணியின் பயிற்சியாளர் ஜோக்கிம் லோ இப்படிக் கூறியுள்ளார்.

ஆனால் 10 வருடமாக திட்டம் போட்ட இந்த அணி கடைசியில் ஒரே ஒரு கோல், அதுவும் கூட ரொம்பக் கஷ்டப்பட்டு கடைசி நேரத்தில் போட்டு வென்றதுதான் இடிக்கிறது - கொஞ்சம்.

இருப்பினும் அவர்களது திட்டம் வெற்றிகரமாக முடிந்திருப்பதை நாம் பாராட்டியே ஆக வேண்டும். அதுவும் எல்லோருக்கும் பிடித்த பிரேசில் அணியை அவர்கள் சந்தித்த விதம், சமாளித்த லாவகம், சரிவடைய வைத்த ஸ்டைல் எல்லாமே பாராட்டுக்குரியவை என்பதில் சந்தேகம் இல்லை.

சரி வாங்க லோ சொன்னதைக் கேட்போம்...

இளைஞர்களைப் பொறுக்கி எடுத்து

இளைஞர்களைப் பொறுக்கி எடுத்து

ஜெர்மனி அணி 2004ல் நடந்த ஈரோ கோப்பைப் போட்டியின் குரூப் பிரிவுக்கு மேல் முன்னேற முடியாமல் போனதும், அதிரடியாக பண்டஸ்லிகா கிளப்புகள் அனைத்தும் புதிய திட்டத்தைக் கையில் எடுத்தன. அதாவது திறமை வாய்ந்த இளம் வீரர்களை அடையாளம் கண்டு மெருகேற்றும் திட்டம்தான் அது.

அதிரடி நடவடிக்கை

அதிரடி நடவடிக்கை

அப்போது நாங்கள் செய்தது அதிரடியான முடிவுகள். அணியின் சரிவை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உத்வேகத்துடன் திட்டமிட்டு செயல்படத் தொடங்கினோம்.

பயிற்சிக்கு முக்கியத்துவம்

பயிற்சிக்கு முக்கியத்துவம்

மேலும் நாங்கள் பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தோம். நல்ல இளம் வீரர்களை தொழில்நுட்ப திறனுடன் கூடியவர்களாக உருவாக்க மிகப் பெரிய அளவில் செலவிட்டோம்.

மையங்கள் திறந்தோம்

மையங்கள் திறந்தோம்

திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்குச் சிறந்த பயிற்சி கொடுக்க நிறைய மையங்களைத் திறந்தோம். அந்த முடிவுகளை பண்டஸ்லிகா கிளப்புகள் எடுத்தது பாராட்டுக்குரியது. அவர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். அவைதான் இன்றைய கோப்பைக் கனவை நனவாக்க காரணம்.

அட்டகாசமான பயிற்சியின் விளைவு

அட்டகாசமான பயிற்சியின் விளைவு

அப்படிக் கொடுக்கப்பட்ட அட்டகாசமான அதிரடியான பயிற்சியின் விளைவால்தான் இன்று நமது கையில் கோப்பை தவழ்கிறது.

சிறப்பான பயிற்சியாளர்கள்

சிறப்பான பயிற்சியாளர்கள்

மேலும் கார்லோ அன்செலோட்டி, ஜப் ஹெய்ன்ச்க்ஸ், பெப் கார்டியோலா ஆகிய பயிற்சியாளர்களும் இங்கு நினைவு கூறத்தக்கவர்கள். சிறப்பாக பயிற்சி அளித்த கிளப் பயிற்சியாளர்கள் இவர்கள்.

ஸ்பெயினின்

ஸ்பெயினின் "டிக்கி டக்கா" காப்பியா....?

ஸ்பெயினின் பிரபலமான டிக்கி டக்கா பாஸிங் ஸ்டைலை நாங்கள் காப்பி அடித்துள்ளோமா என்பது குறித்து எனக்குத் தெரியாது. கடந்த சில வருடங்களாகவே நாங்கள் எங்களது ஸ்டைலை உருவாக்கி வளர்த்துள்ளோம். அது டிக்கி டக்காவின் பாதிப்பா என்று கணிக்க முடியவில்லை.

இன்னும் நிறைய வரும்

இன்னும் நிறைய வரும்

இப்போது கிடைத்துள்ள வெற்றி முடிவல்ல, இதை விட பெரிய வெற்றிகளை ஜெர்மனி எதிர்காலத்தில் பெறும். அப்படிப்பட்ட வெற்றிகளை உறுதி செய்வதற்கு ஜெர்மனியின் கால்பந்து கிளப்கள் அயராது பாடுபடும். அருமையான, திறமையான, இளம் வீரர்கள் இங்கு நிறையே உள்ளனர். எனவே பெருமைகள் கூடிக் கொண்டேதான் போகும்.

பல காலத்திற்குக் கலக்குவார்கள்

பல காலத்திற்குக் கலக்குவார்கள்

மரியோ கோட்ஸே , மார்கோ ரூஸ், சமி கெதிரா, ஆண்ட்ரே ஸ்ருல்லோ, டோனி க்ரூஸ் ஆகியோர் இளம் வீரர்கள் ஆவர். இவர்கள் பல காலத்திற்கு பிரமாதமாக ஆடுவார்கள். ஜெர்மனிக்குப் பெருமை சேர்ப்பார்கள்.

வலுவான அணி

வலுவான அணி

ஜெர்மனி அணி ஆரம்பம் முதலே தான் ஒரு வலுவான அணி என்பதை நிரூபித்து வந்தது. இறுதியில் ஒருவர்தான் வெற்றியாளராக இருக்க முடியும். அது நாங்களாக இருந்ததில் எங்களுக்குப் பெருமை.

7 போட்டிகளிலும் கெத்தான ஆட்டம்

7 போட்டிகளிலும் கெத்தான ஆட்டம்

நாங்கள் இன்று மட்டுமல்ல, மோதிய 7 போட்டிகளிலுமே ஆதிக்கம் செலுத்தியிருந்தோம். சிறப்பாக ஆடியிருந்தோம். 10 வருட உழைப்புக்குக் கிடைத்த பலன் இது.

நம்ப முடியாத உத்வேகம்

நம்ப முடியாத உத்வேகம்

நம்ப முடியாத அளவுக்கு எங்களது அணியின் உத்வேகம், ஒத்துழைப்பு, ஒற்றுமை இருந்தது. அனைவருமே தொழில்நுட்ப ரீதியாக திறமை வாய்ந்தவர்களாக இருந்தனர். இதனால்தான் சாதிக்க முடிந்தது.

கால்பந்து தாயகத்தில் முத்திரை

கால்பந்து தாயகத்தில் முத்திரை

அமெரிக்கக் கண்டத்தில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியை முதல் முறையாக வென்ற ஐரோப்பிய அணியாக, அதிலும் கால்பந்து ஆட்டத்தின் தாயகமான பிரேசிலில் வைத்து நாங்கள் வென்றது எங்களை நிறையவே பெருமைப்படுத்துகிறது என்றார் லோ.

Story first published: Monday, July 14, 2014, 14:46 [IST]
Other articles published on Jul 14, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+