Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெர்மனி – கானா போட்டிக்கிடையே கிலியைக் கிளப்பிய “ஹிட்லரின் ரசிகர்”!

ரியோ டி ஜெனீரோ: ஜெர்மனி- கானா அணிகளுக்கிடையிலான உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின்போது நாஜி ஆதரவாளர் ஒருவர் மைதானத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டை இல்லாமல் உள்ளே புகுந்த அவரால் சில நிமிடங்களுக்குப் போட்டி பாதிக்கப்பட்டது.

கஜினி சூர்யா போல தனது உடலில் சில வாசகங்களை அவர் எழுதியிருந்தார். அதில் எச்எச் என்றும் எஸ்எஸ் என்றும் இடம் பெற்றிருந்தது. எச்எச் என்றால் ஹெய்ல் ஹிட்லர் அதாவது வாழ்க ஹிட்லர் என்று பொருள். அதேபோல நாஜிக்களின் புற ராணுவப் படையைக் குறிக்கும் வாசகம்தான் இந்த எஸ்எஸ்.

Germany vs Ghana Match Pitch Invader Was Neo-Nazi Sympathiser, Says Report

இந்த ரசிகரின் குறுக்கீடு தற்போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரித்து வருகிறது.

போட்டியின் 2வது பாதியில் 2-2 என்ற கணக்கில் போட்டி டிராவில் இருந்தபோது அந்த ரசிகர் குறுக்கிட்டார். அவரது உடலில் ஹிட்லர் ஆதரவு வாசகம் தவிர ஒரு இமெயில் முகவரி, தொலைபேசி எண், போலந்து தொலைபேசி கோட் எண் ஆகியவையும் எழுதப்பட்டிருந்தது.

கானா வீரர் சுல்லிமுன்டாரி அந்த நபரை அங்கிருந்து போகுமாறு கூறினார். அதற்குள் பாதுகாவலர்கள் வந்து அந்த நபரை அப்புறப்படுத்திச் சென்றனர்.

Story first published: Tuesday, June 24, 2014, 12:02 [IST]
Other articles published on Jun 24, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+