Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆக்ரோஷம் காட்டிய ஸ்பெயின்.. போராடி தப்பித்த ஜெர்மனி.. டிராவில் முடிந்த ஆட்டம்!

தோஹா: ஸ்பெயின் - ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்து போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய நாளின் கடைசி ஆட்டத்தில் அணிகளான ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதியது. முன்னாள் சாம்பியன் அணிகள் மோதிய ஆட்டம் என்பதால் இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

Germany vs Spain Match ends in a draw by 1-1 in FIFA world cup 2022

அதுமட்டுமல்லாமல் ஜெர்மனி அணி தங்களது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததால், இந்த போட்டியில் ஜெர்மனி அணி வெல்ல வேண்டிய தேவை எழுந்தது. இதனால் ஆட்டம் தொடங்கியது முதலே ஜெர்மனி அணி மீது அழுத்தம் இருந்தது.

இதனால் ஆட்டம் தொடங்கியது முதலே ஜெர்மினி வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஸ்பெயின் அணி வீரர்கள் தொடக்கம் முதலே அட்டாக் செய்ததால், முதலில் யார் கோல் அடித்து முன்னிலை பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் 39வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் ஆண்டனியோ கோல் அடித்து அசத்தினார். ஆனால் அந்த கோல் நடுவர்களால் ஆஃப் சைடு கொடுக்கப்பட்டதால், கோல் திரும்ப பெறப்பட்டது. பின்னர் இரு அணிகளும் முதல் பாதி நேரத்தில் கோல் எதுவும் அடிக்காததால், ஆட்டம் 0-0 என்ற நிலையில் முடிவுக்கு வந்தது.

பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. இதன் பலனாக ஸ்பெயின அணிக்கு 62வது நிமிடத்தில் கோல் கிடைத்து. அந்த அணியின் மொராட்டா ஆட்டத்தின் முதல் கோலை அடித்து அசத்தினார்.

இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் ஜெர்மனி அணி கோல் அடித்து முதல் கோலை சமன் செய்தது. அந்த அணியின் ஃபுல்கிரக் அசாத்திய கோல் அடித்து அசத்தினார்.

இதனைத்தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டத்தில் கூடுதல் நேரமாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆனால் கூடுதல் நேரத்தில் எந்த கோலும் அடிக்கப்படாததால், ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் ஜெர்மனி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

Story first published: Monday, November 28, 2022, 14:11 [IST]
Other articles published on Nov 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+