மறைந்த மரடோனாவிற்கு சிலை... கோவா அரசு அறிவிப்பு... இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சி
பனாஜி : மறைந்த டியாகோ மரடோனாவிற்கு உருவச்சிலை அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அமைக்கப்படும் என்று கோவா அரசு அறிவித்துள்ளது.
கால்பந்தாட்ட ரசிகர்களை ஊக்குவிக்கும்வகையில் மரடோனாவின் உருவச்சிலை வடக்கு கடற்கரை மாவட்டத்தில் அமைக்கப்படும் என்று கடந்த 2018ல் கோவா அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மரடோனாவின் மறைவையொட்டி இந்த பணிகள் துரிதப்படுத்தப்படும் என்று கோவாவின் மூத்த அமைச்சர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.
கால்பந்தாட்டத்தை விளையாடிவரும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2018ல் டியாகோ மரடோனா மற்றும் கிறிஸ்டினா ரொனால்டோ ஆகியோரின் உருவச்சிலைகள் அமைக்கப்படும் என கோவா அரசு அறிவித்திருந்தது. அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது மரடோனாவின் மறைவையடுத்து அந்த பணிகள் துரிதப்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வட கடலோர மாவட்டத்தில் மரடோனாவின் 350 கிலோ எடையுள்ள ஆளுயர உருவச்சிலை அமைக்கப்படும் என்று கோவாவின் மூத்த அமைச்சர் மைக்கேல் லோபோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications