
17வது வயதில் முதல் போட்டி
கால்பந்து உலகத்தில் பார்சிலோனா மற்றும் அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸிக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் காணப்படுகிறது. கடந்த 2004 -05 சீசனில் பார்சிலோனா பி அணியிலிருந்து எப்சி பார்சிலோனா அணிக்கான லா லிகா தொடரில் தனது 17வது வயதில் தனது முதல் போட்டியில் பங்கேற்றார் மெஸ்ஸி.

10 லா லிகா டைட்டில்கள்
2005ல் ஆல்பாசெட் அணிக்கு எதிராக பார்சிலோனா அணியில் விளையாடிய மெஸ்ஸி, தனது முதல் கோலை போட்டு மிகவும் இளம் வயதில் பார்சிலோனா அணியில் பங்கேற்று ஆடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அதன்பிறகு 10 லா லிகா டைட்டில்களை வென்று சாதனை புரிந்துள்ளார் மெஸ்ஸி. அதே 2005 ஆண்டில் லா லிகா பட்டத்தை 6 ஆண்டுகளில் முதல்முறையாக பார்சிலோனா பெற்றது.

440 கோல்கள் அடித்து சாதனை
லா லிகா தொடரில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையும் மெஸ்ஸிக்கு கிடைத்துள்ளது. இதுவரை இந்த தொடரில் 440 கோல்களை அவர் அடித்துள்ளார். மேலும் 36 ஹாட்ரிக்சையும் அடித்து அவர் சாதனை புரிந்துள்ளார். மேலும் பார்சிலோனா அணிக்காக 722 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 629 கோல்களை அடித்துள்ளார்.

ரொனால்டோவை முந்திய சாதனை
கால்பந்தாட்டத்தில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின்மூலம் மேலும் 6 முறை பாலன் டி'ஆர் விருதுகளை பெற்றுள்ளார் மெஸ்ஸி. கடந்த 2009, 2010, 2011, 2012, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இந்த பட்டங்களை இவர் பெற்றுள்ளார். இந்த வகையில் பாலன் டி'ஆர் விருதை 5 முறை மட்டுமே கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும் பிபா உலக கோப்பை டிராபியையும் மெஸ்ஸி பெற்றுள்ளார்.

குவியும் வாழ்த்துக்கள்
மெஸ்ஸிக்கு அவருடைய பிறந்த தினத்தையொட்டி சர்வதேச அளவில் பல்வேறு தரப்பிலிருந்தும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பார்சிலோனா அணி சார்பிலும் பிபா உலக கோப்பை சார்பிலும் அவருடைய வீடியோ வெளியிடப்பட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராய் நெமர் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications













