Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெண்டாவது முறையாக மோதும் அணிகள்...வெற்றியை இரட்டிப்பாக்க திட்டமிடும் மோஹுன் பகன்!

படோர்டா : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 88வது போட்டி கோவாவின் படோர்டாவில் இன்றைய தினம் துவங்கி நடைபெறவுள்ளது.

இதில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதவுள்ளன.

இரு அணிகளும் ஏற்கனவே மோதியுள்ள நிலையில் அதில் மோஹுன் பகன் அணி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டுள்ளது.

88வது போட்டி

88வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 88வது போட்டி இன்றைய தினம் கோவாவின் படோர்டா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் கடந்த போட்டியில் விளையாடிய நிலையில் 1க்கு 0 என்ற கணக்கில் மோஹுன் பகன் வெற்றி கொண்டது.

மோஹுன் பகன் தீவிரம்

மோஹுன் பகன் தீவிரம்

இந்நிலையில் இன்றைய போட்டியில் அந்த வெற்றியை தொடர மோஹுன் பகன் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. பெங்களூருவை காட்டிலும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் மோஹுன் பகன் அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் வலிமையாக உள்ளது.

2வது இடத்தில் மோஹுன் பகன்

2வது இடத்தில் மோஹுன் பகன்

இதுவரை விளையாடியுள்ள 15 போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்றுள்ள அந்த அணி 30 புள்ளிகளுடன் மும்பை சிட்டி எப்சி அணிக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அந்த அணியின் வெற்றிக் கணக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6வது இடத்தில் பெங்களூரு எப்சி

6வது இடத்தில் பெங்களூரு எப்சி

கடந்த ஒடிசா எப்சி அணிக்கு எதிரான போட்டியிலும் 4க்கு 1 என்ற வலிமையான கோல் வித்தியாசத்தில் மோஹுன் பகன் அணி வெற்றி கொண்டுள்ளது. இந்நிலையில் சராசரிக்கும் குறைவாகவே இந்த தொடரில் விளையாடிவரும் பெங்களூரு அணி 16 போட்டிகளில் விளையாடி 19 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. கடந்த சென்னையின் எப்சி அணிக்கு எதிரான போட்டியை டிரா செய்துள்ளது.

Story first published: Tuesday, February 9, 2021, 21:07 [IST]
Other articles published on Feb 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+