Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வலிமையான மும்பை சிட்டியுடன் மோதும் கோவா அணி... வெற்றிக்கு தீவிரம்!

பேம்போலிம் : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 87வது போட்டி கோவாவின் ஜிஎம்சி மைதானத்தில் இன்றைய தினம் துவங்கி நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் மும்பை சிட்டி எப்சி மற்றும் எப்சி கோவா அணிகள் இன்றைய தினம் மோதவுள்ளன.

இந்த போட்டியில் முதலிடத்தில் உள்ள மும்பை சிட்டி எப்சி அணியுடன் 5வது இடத்தில் உள்ள எப்சி கோவா அணி மோதவுள்ளது.

87வது போட்டி

87வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 87வது போட்டி இன்றைய தினம் கோவாவின் ஜிஎம்சி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு துவங்கி நடைபெறவுள்ளது. இதில் மும்பை சிட்டி எப்சி மற்றும் எப்சி கோவா அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் முறையே முதல் இடம் மற்றும் 5வது இடத்தில் உள்ளன.

5வது இடத்தில் எப்சி கோவா

5வது இடத்தில் எப்சி கோவா

இதுவரை விளையாடியுள்ள 15 போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றி பெற்று 33 புள்ளிகளுடன் முதலிடத்தில் வலிமையாக உள்ளது மும்பை சிட்டி எப்சி. ஆனால் கடந்த 4 போட்டிகளில் தொடர் தோல்விகளை கண்டு புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்திற்கு கீழிறங்கியுள்ளது எப்சி கோவா.

5வது இடத்தில் கோவா அணி

5வது இடத்தில் கோவா அணி

கடந்த நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியை 1க்கு 1 என்ற கோல் கணக்கில் டிரா செய்ததன்மூலம் 5வது இடத்தை பிடித்துள்ளது கோவா அணி. இதேபோல கடந்த போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதிய மும்பை அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

முன்னேற தீவிரம்

முன்னேற தீவிரம்

இந்நிலையில் இந்த போட்டி எப்சி கோவா அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் ஐதராபாத் மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணிகளை பின்னுக்கு தள்ளி முன்னேறும் வாய்ப்பு எப்சி கோவா அணிக்கு காணப்படுகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியையும் டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ டிவி ஆப்பிலும் கண்டுகளிக்கலாம்.

Story first published: Monday, February 8, 2021, 20:49 [IST]
Other articles published on Feb 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+