Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10வது இடத்துல இருந்தாலும் நம்பிக்கையை கைவிடாமல் போராடும் ஈஸ்ட் பெங்கால்!

வாஸ்கோடகாமா :கோவாவின் வாஸ்கோடகாமாவில் திலக் மைதானத்தில் ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் இன்றைய 91வது போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் ஐதராபாத் எப்சி மற்றும் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதவுள்ளன.

இரு அணிகளும் முறையே 4வது மற்றும் 10வது இடங்களில் உள்ள நிலையில் இரு அணிகளின் ப்ளே -ஆப் கனவு நிறைவேற இன்றைய போட்டியில் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கலாம்.

91வது போட்டி

91வது போட்டி

கோவாவின் வாஸ்கோடகாமாவில் திலக் மைதானத்தில் ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 91வது போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இதில் 4வது இடத்தில் உள்ள ஐதராபாத் எப்சி அணி மற்றும் 10வது இடத்தில் உள்ள எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதவுள்ளன.

சிறப்பான முன்னேற்றம்

சிறப்பான முன்னேற்றம்

இந்த தொடரில் சிறப்பாக முன்னேற்றமடைந்து சிறப்பான போட்டிகளை தந்து 4வது இடத்தில் ஐதராபாத் எப்சி அணி காணப்படுகிறது. 3வது மற்றும் 5வது இடங்களில் உள்ள எப்சி கோவா மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகளுடன் சமமான 23 புள்ளிகளுடன் ஐதராபாத் அணி காணப்படுகிறது.

சமநிலையில் அணிகள்

சமநிலையில் அணிகள்

இந்த 3 அணிகளும் தலா 16 போட்டிகளை விளையாடி அதிலும் சமநிலையில்காணப்படுகின்றன. கடந்த நார்த்ஈஸ்ட் அணியுடனான போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் தற்போதைய 4வது இடத்தில் ஐதராபாத் அணி முன்னேறியுள்ளது.

ப்ளே-ஆப் கனவு

ப்ளே-ஆப் கனவு

இந்நிலையில் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் இருந்தாலும் அடுத்தடுத்து விளையாடவுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றால் ப்ளே -ஆப்பிற்கு முன்னேறும் வாய்ப்புள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெற ஈஸ்ட் பெங்கால் அணி தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Friday, February 12, 2021, 20:45 [IST]
Other articles published on Feb 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+