Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது நார்மலான சீசனே இல்ல... யாரு முதல் 4 இடத்துல வருவாங்கன்னு சொல்ல முடியல... மார்க்வெஸ்

கோவா : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 51வது போட்டி கோவாவின் திலக் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இதில் ஐதராபாத் எப்சி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை போல இல்லை என்றும் யார் முதல் 4 இடங்களை பிடிப்பார்கள் என்பதை சொல்ல முடியவில்லை என்றும் ஐதராபாத் எப்சியின் கோச் மார்க்வெஸ் ரோகா தெரிவித்துள்ளார்.

51வது போட்டி

51வது போட்டி

ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 51வது போட்டி கோவாவின் திலக் மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இதில் ஐதராபாத் எப்சி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதவுள்ளன. ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள இந்த அணிகள் அடுத்த கட்டத்திற்கு நகரும் முனைப்பில் இன்றைய போட்டியில் விளையாடவுள்ளன.

கணிக்க முடியவில்லை -கோச்

கணிக்க முடியவில்லை -கோச்

ஐதராபாத் எப்சி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்திலும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி 11 புள்ளிகளுடன் அடுத்த இடத்திலும் உள்ளன. இந்நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை போல இல்லை என்றும் முதல் 4 இடங்களில் எந்த அணிகள் இடம்பெறும் என்பதை கணிக்க முடியவில்லை என்றும் ஐதராபாத் அணியின் கோச் தெரிவித்துள்ளார்.

நார்த்ஈஸ்ட் அணியின் சிறப்பு

நார்த்ஈஸ்ட் அணியின் சிறப்பு

ஆயினும் தங்களது போட்டிகளில் அடுத்தடுத்து கவனம் வைத்து விளையாடுவதாகவும் அதே தீவிரத்துடன் நார்த்ஈஸ்ட் அணியை இன்றைய போட்டியில் எதிர்கொள்ளவுள்ளதாகவும் மார்க்வெஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் நார்த்ஈஸ்ட் அணி சிறப்பானது என்றும் அந்த அணியில் திறமையான இளம் வீரர்கள் மற்றும் திறமையான கோச் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கொள்வது பயங்கரமானது

எதிர்கொள்வது பயங்கரமானது

அந்த அணியில் அப்பையா, லாம்போட், அபுயா உள்ளிட்ட வீரர்கள் திறமையுடன் உள்ளதாகவும் அவர்களை எதிர்கொள்வது மிகவும் பயங்கரமானது என்றும் மார்க்வெஸ் தெரிவித்துள்ளார். கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் இந்த போட்டியில் அதை சரிசெய்து விடுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, January 8, 2021, 19:44 [IST]
Other articles published on Jan 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+