Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1வது 4வது இடத்தில் உள்ள அணிகள் மோதிய போட்டி... ஆனாலும் டிரா!

வாஸ்கோடகாமா : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 103வது போட்டி கோவாவின் வாஸ்கோடகாமாவில் திலக் மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.

இதில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் ஐதராபாத் எப்சி அணிகள் மோதிய நிலையில், போட்டி 2க்கு 2 என்ற கோல் கணக்கில் டிரா ஆகியுள்ளது.

இதன்மூலம் லீக் வின்னர்ஸ் கோப்பையை கைப்பற்றும் மோஹுன் பகன் அணியின் கனவும் ப்ளே ஆப் சுற்றிற்கு முன்னேறும் ஐதராபாத் எப்சி அணியின் கனவும் தள்ளிப் போயுள்ளது.

டிரா ஆன 103வது போட்டி

டிரா ஆன 103வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 103வது போட்டி நேற்றைய தினம் கோவாவின் பேம்போலிம்மில் நடைபெற்றது. இதில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஏடிகே மோஹுன் பகன் மற்றும் 4வது இடத்தில் உள்ள ஐதராபாத் எப்சி அணிகள் மோதிய நிலையில் போட்டி 2க்கு 2 என்ற கோல் கணக்கில் டிரா ஆகியுள்ளது.

முக்கியமான அடுத்த போட்டி

முக்கியமான அடுத்த போட்டி

நேற்றைய போட்டியில் வெற்றி பெறுவதன்மூலம் முதலிடத்தை தக்க வைத்து லீக் வின்னர்ஸ் கோப்பையை கைப்பற்றும் மோஹுன் பகன் அணியின் கனவும் ப்ளே -ஆப் சுற்றிற்கு முன்னேறும் ஐதராபாத் எப்சி அணியின் கனவும் தள்ளி போயுள்ளது. இதையடுத்து இரு அணிகளும் அடுத்து விளையாட வேண்டிய போட்டியில் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது..

நார்த்ஈஸ்ட்க்கு சாதகமான போட்டி

நார்த்ஈஸ்ட்க்கு சாதகமான போட்டி

மோஹுன் பகன் அணி அடுத்ததாக மும்பை சிட்டி எப்சியுடனும் ஐதராபாத் எப்சி அணி எப்சி கோவா அணியுடனும் விளையாடவுள்ள நிலையில், அந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் ஐதராபாத் அணியின் தோல்வி, நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி ப்ளே-ஆப் சுற்றிற்கு முன்னேற சாதகமாக உள்ளது.

ஐதராபாத் கோச் பாராட்டு

ஐதராபாத் கோச் பாராட்டு

கடந்த டிசம்பர் 11ம் தேதி ஏடிகே மோஹுன் பகன் மற்றும் ஐதராபாத் எப்சி அணிகள் மோதின. அந்த போட்டியும் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் வலிமையான அணியுடன் மோதியதாக ஐதராபாத் கோச் மானுவல் மார்கஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனிடையே, ஐதராபாத் அணியின் பார்ம் சிறப்பாக இருந்ததாக மோஹுன் பகன் அணியின் கோச் ஹபாஸ் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, February 23, 2021, 10:10 [IST]
Other articles published on Feb 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+