Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரண்டாவது முறையாக மோதும் அணிகள்... சமநிலையில் ஐதராபாத் -நார்த்ஈஸ்ட் யுனைடெட்!

கோவா : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 86வது போட்டி கோவாவின் திலக் மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இதில் ஐதராபாத் எப்சி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணிகள் இரண்டாவது முறையாக மோதவுள்ளன.

இரு அணிகளும் கடந்த ஜனவரி 8ம் தேதி நடைபெற்ற போட்டியில் மோதிய நிலையில், 4க்கு 2 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணி அந்த போட்டியில் வெற்றி கொண்டது.

86வது போட்டி

86வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 86வது போட்டி கோவாவின் திலக் மைதானத்தில் இன்றைய தினம் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஐதராபாத் எப்சி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணிகள் மோதவுள்ளன. ஐஎஸ்எல் 2020-21 புள்ளிகள் பட்டியலில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

முந்தைய போட்டியில் வெற்றி

முந்தைய போட்டியில் வெற்றி

இரு அணிகளும் 15 போட்டிகளில் இதுவரை விளையாடி 5 வெற்றிகளுடன் 22 புள்ளிகளுடன் 4வது மற்றும் 5வது இடங்களில் உள்ளன. ஐதராபாத் எப்சி அணி 4வது இடத்திலும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணி 5வது இடத்திலும் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் மோதிய நிலையில் 4க்கு 2 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் வெற்றி கொண்டது.

புள்ளிகள் பட்டியலில் முன்னேற விருப்பம்

புள்ளிகள் பட்டியலில் முன்னேற விருப்பம்

இந்நிலையில் அந்த வெற்றியை மீண்டும் நடைமுறைப் படுத்த ஐதராபாத் எப்சி அணி முனைப்பு காட்டி வருகிறது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலிலும் மேலும் அந்த அணி முன்னேற முடியும். கடந்த சென்னையின் எப்சி அணிக்கு எதிரான போட்டியிலும் ஐதராபாத் அணி 2க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு வலிமையுடன் உள்ளது.

டிரா செய்த நார்த்ஈஸ்ட் யுனைடெட்

டிரா செய்த நார்த்ஈஸ்ட் யுனைடெட்

ஆனால் கடந்த எப்சி கோவா அணிக்கு எதிரான போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி 2க்கு 2 என்ற கோல் கணக்கில் போட்டியை டிரா செய்துள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த போட்டியை டிஸ்னி ஹாட் ஸ்டாரிலும் ஜியோ டிவியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

Story first published: Sunday, February 7, 2021, 20:45 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+