பிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - திட்டமிட்டு செயல்படும் போலந்து!
சென்னை:21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.
---
நாடு : போலந்து
எச் பிரிவில் ஜப்பான், செனகல், கொலம்பியாவுடன் இடம் பெற்றுள்ளது.
லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 19ல் செனகல்
ஜூன் 24ல் கொலம்பியா
ஜூன் 28ல் ஜப்பான்
பிபா தரவரிசை : 7
கடந்த உலகக் கோப்பையில் : தகுதிப் பெறவில்லை
கடைசியாக விளையாடிய உலகக் கோப்பை : 2006 (பிரிவுகள் நிலையிலேயே வெளியேறியது)
உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 1974 மற்றும் 1982ல் மூன்றாவது இடம்
முக்கிய வீரர்கள் : ராபர்ட் லெவான்டோஸ்கி, காமில் ஜில்க், அர்க்காடியுஸ் மிலிக், வோஜ்சிச் செக்ஜெஸ்னி
கோச் : ஆடம் நவால்கா
---
இந்த உலகக் கோப்பையில் பார்த்த ரசிக்கக் கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியாக போலந்து உள்ளது. குறிப்பாக அதன் கேப்டன் ராபர்ட் லெவான்டோஸ்கி, தகுதிச் சுற்றில் 16 கோல்களை அடித்துள்ளார்.
இதுவரை ஒருமுறை கூட பைனல் போகாத போலந்து எப்படி தரவரிசையில் 7வது இடத்தில் உள்ளது என்ற சந்தேகம் பலரும் எழலாம்.
பிபாவின் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை போலந்து சரியாக பயன்படுத்திக் கொண்டது. 2016 முதல் எந்த நாட்டுடனும் நட்பு போட்டிகளில் அது பங்கேற்கவில்லை. அதனால், உலகக் கோப்பைக்கான அணிகள் தரவரிசையின்போது அது 6வது இடத்தில் இருந்தது.
அதனால்தான் மிகவும் சுலபமான பிரிவில் அது இடம்பெற்றுள்ளது. ஆனாலும் கொலம்பியா மற்றும் செனகலும் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ளது அதற்கு சவாலாகவே இருக்கும்.
போலந்து அணிக்கு இந்த உலகக் கோப்பையில் உள்ள மிகப் பெரிய சவால், லெவான்டோஸ்கியைவிட, அணி மிகப் பெரிய என்பதை நிரூபிப்பது ஆகும். அதாவது போலந்து அணி மிகவும் வலிமையான அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மற்ற வீரர்கள் உள்ளனர்.
அணியின் நான்கு தடுப்பாட்டகாரர்களான பிஸ்செக், காமில் ஜிலிக், பஸ்தான், ரைபஸ் ஆகிய அனைவரும் 30 வயதைத் தாண்டியவர்கள். இவர்களுடைய அனுபவம் கொலம்பியாவுக்கு பலமாக இருந்தாலும், செனகல் மற்றும் ஜப்பான் போன்ற துடிப்பான அணிகளுக்கு எதிராக அவர்களுடைய அனுபவம் வெற்றி பெற வேண்டும்.
எச் பிரிவில் இருந்து, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறக் கூடிய அணிகளில் ஒன்றாக போலந்து உள்ளது. காலிறுதிக்கு நுழையவும் வாய்ப்பும் இந்த அணிக்கு உள்ளது.


Click it and Unblock the Notifications