Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜாம்ஷெட்பூரின் தொடர் வெற்றி... தடுத்து நிறுத்திய எப்சி கோவா... சிறப்பான ஆங்குலோ கோல்கள்!

வாஸ்கோ : கோவாவின் வாஸ்கோவில் திலக் மைதானத்தில் நேற்றைய தினம் ஜாம்ஷெட்பூர் எப்சி மற்றும் எப்சி கோவா அணிகளுக்கிடையில் ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 38வது போட்டி நடைபெற்றது.

இதில் ஜாம்ஷெட்பூர் எப்சி அணியை 2க்கு 1 என்ற கோல் கணக்கில் எப்சி கோவா அணி வெற்றி கொண்டுள்ளது.

இதன் மூலம் தொடர்ந்து 6 வெற்றிகளை பெற்றிருந்த ஜாம்ஷெட்பூரின் அடுத்த வெற்றிக்கான கனவு தகர்ந்துள்ளது.

கோவா அணி வெற்றி

கோவா அணி வெற்றி

கோவாவின் வாஸ்கோவில் திலக் மைதானத்தில் நேற்றைய தினம் ஜாம்ஷெட்பூர் எப்சி மற்றும் எப்சி கோவா அணிகளுக்கிடையில் ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 38வது போட்டி நடைபெற்றது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்னதாக நடைபெற்றுள்ள இந்தப் போட்டியில் எப்சி கோவா அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ளது.

ஆங்குலோவின் அடுத்தடுத்த கோல்

ஆங்குலோவின் அடுத்தடுத்த கோல்

ஜாம்ஷெட்பூர் அணி துவக்கத்தில் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியதை காண முடிந்தது. அந்த அணியின் ஸ்டீபன் ஈஸ் அணியின் துவக்கத்தில் தன்னுடைய அணியின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தார். ஆனால் கோவா அணியின் ஆங்குலோவின் அடுத்தடுத்த கோல்கள் போட்டியை அந்த அணிக்கு சாதகமாக்கியது.

ஜாம்ஷெட்பூரின் தகர்ந்த கனவு

ஜாம்ஷெட்பூரின் தகர்ந்த கனவு

இதையடுத்து கடநத 6 போட்டிகளில் தொடர் வெற்றி கொண்டுள்ள ஜாம்ஷெட்பூரின் தொடர் வெற்றி கனவு தகர்ந்துள்ளது. இரு அணிகளும் துவக்கம் முதலே தீவிரத்தை காட்டிய நிலையில், அடுத்தடுத்த கோல் அடிக்கும் வாய்ப்புகளை உருவாக்க ஜாம்ஷெட்பூர் அணி தவறியது.

முதலிடத்தில் ஆங்குலோ

முதலிடத்தில் ஆங்குலோ

இந்த போட்டியில் கோவா வீரர் இகோர் ஆங்குலோவின் 2 கோல்களை அடுத்து அவர் இந்த தொடரில் 8 போட்டிகளில் 8 கோல்களை பூர்த்தி செய்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இரண்டாவது இடத்தில் ஜாம்ஷெட்பூரின் நெரிஜூஸ் வால்ஸ்கிஸ் 6 கோல்களுடன் உள்ளார். நேற்றைய போட்டியில் அவர் கோல் எதுவும் அடிக்கவில்லை.

Story first published: Thursday, December 24, 2020, 12:49 [IST]
Other articles published on Dec 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+