உலக ஹாக்கி லீக்: ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்தியா
புவனேஸ்வர்: உலக ஹாக்கி லீக் தொடரில் ஜெர்மனியை வென்று இந்தியா வெணகலப் பதக்கம் வென்றது.
ஹாக்கி விளையாட்டில் சர்வதேச தரவரிசையில் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் போட்டிகள் ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது.

வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜெண்டினாவை இந்தியா எதிர்கொண்டது. இதில் அர்ஜெண்டினா வென்றது.
இதனைத் தொடர்ந்து இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியை இந்தியா எதிர்கொண்டது. இதில் ஜெர்மனியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றது.
Story first published: Sunday, December 10, 2017, 19:26 [IST]
Other articles published on Dec 10, 2017


Click it and Unblock the Notifications