உலகக்கோப்பை கால்பந்து போட்டியைக் காண குடும்பத்துடன் ரஷ்யா சென்ற இந்தியர்
Recommended Video

மாஸ்கோ: ஜெர்மனியில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த சம்புத்தா கோஷ் ரஷ்யாவில் நடந்துகொண்டிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளைக் காண குடும்பத்துடன் மாஸ்கோ சென்றுள்ளார்
ரஷ்யாவில் உள்ள இஸ்மைலோவ்ஸ்கியில் உள்ள இஸ்மைலோவ் பெடா என்ற ஹோட்டலில் ஊடகங்களுக்கு சம்புத்தா கோஷ் குடும்பத்துடன் பேட்டியளித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் கூறுகையில், "நான் முதன்முதலில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நேரில் காண ஆர்வமாக இருக்கிறேன்.

உலகக்கோப்பை போட்டிகளைக் காண குடும்பத்துடன் வரும் இந்தியர்களில் நானும் ஒருவன். நான் ஜெர்மனியில் வேலை செய்கிறேன். ஆனாலும், ஜெர்மனியில் இருந்து உலகக்கோப்பை போட்டிகளைக் காண ஏன் வந்திருக்கிறேன் என்றால், உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடப்பதால் திருவிழா போல கொண்டாட்டமாக இருக்கும். அது ரொம்ப அற்புதமாக இருக்கும். அதைக் காணவே வந்திருக்கிறேன்." என்று கூறினார்.
சம்புத்தா கோஷுடன் இருந்த அவரது மனைவி மற்றும் அம்மாவும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளைக் காண ஆர்வமாக இருந்தனர்.
நமது நிருபர் அரவிந்த் ரஷ்யாவில் இருந்து அங்குள்ள கால்பந்தாட்டம் தொடர்பான கள நிலவரங்களை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications