இனி விளையாடவே முடியாதா??.. இந்திய கால்பந்து அணிக்கு அடுத்த அடி.. 2 முக்கிய போட்டிகள் ரத்து!
மும்பை: இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையை ஃபிபா எடுத்துள்ளது.
Recommended Video
இந்திய கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் கடந்த ஒருவார காலமாக கவலையில் உள்ளனர்.
3வது தரப்பினரின் தலையீடு இருப்பதாக கூறி இந்திய அணிக்கு தடைவிதித்து ஃபிபா அமைப்பு உத்தரவிட்டது.

காரணம் என்ன
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் ஒட்டுமொத்த அதிகாரிகளையும் உச்சநீதிமன்றம் நீக்கியது. மேலும் இந்த கூட்டமைப்புக்கான சட்ட திருத்தங்களை மாற்றி அமைக்கவும், தேர்தல்களை விரைவாக நடத்தி முடிக்கவும் 3 பேர் கொண்ட குழுவை நீதிமன்றம் சார்பில் அமைத்தனர். அந்த குழு தான் அனைத்து முடிவுகளையும் எடுத்து வந்தனர்.

இந்திய அணிக்கு தடை
FIFA -ன் விதிகளின் படி ஒரு நாட்டின் கூட்டமைப்பு தனிப்பட்டு இயங்க வேண்டும், 3வது தரப்பின் தலையீடு இருக்க வேண்டும். இதற்கு பலமுறை ஃபிபா எச்சரித்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதியன்று இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடைவிதித்தது. இதனால் சர்வதேச அங்கீகாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.

அடுத்த நடவடிக்கை
இந்நிலையில் அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து அணி வரும் செப்டம்பர் மாதத்தில் சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் அணிகளுடன் நட்பு ரீதியான தொடரை விளையாடவிருந்தது. ஆனால் அந்த இரண்டு தொடர்களுமே இன்று ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சிங்கப்பூர் அணிக்கு ஃபிபா-விடம் இருந்து நோட்டீஸ் வந்ததை அடுத்து அந்நாடு பின் வாங்கியது. வியாட்நாம் அணியோ, ஃபிபா கூறுவதற்கு முன்னதாகவே இந்திய அணியிடம் போட்டியை நடத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications