Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெஸ்ஸியை பேஸ்புக்கில் குண்டாங்குறையாக திட்டி மகிழும் ஈரான் ரசிகர்கள்...!

டெஹரான்: ஈரான் கால்பந்து ரசிகர்கள், அர்ஜென்டினா சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸியையும், பிரேசில் மாடல் அழகி பெர்னாண்டா லிமாவையும் பேஸ்புக்கில் சரமாரியாக திட்டியும், சாடியும், விமர்சித்தும் எழுதி வருகிறார்கள்.

2014ம் ஆண்டு பிரேசிலில் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது.

இதில் ஒரே பிரிவில் அர்ஜென்டினாவும், ஈரானும் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் அர்ஜென்டினாவை சீண்ட ஆரம்பித்துள்ளனர் ஈரான் ரசிகர்கள். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த களம் பேஸ்புக். சிக்கிய வீரர் மெஸ்ஸி.

அர்ஜென்டினாவுடன்

அர்ஜென்டினாவுடன்

அர்ஜென்டினா இடம் பெற்றுள்ள எப் பிரிவில் அந்த அணி தவிர ஆப்பிரிக்க சாம்பின் நைஜீரியா, புதுமுக அணியான போஸ்னியா-ஹெர்ஸகோவினா, ஈரான் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

4வது முறையாக ஈரான்

4வது முறையாக ஈரான்

நான்காவது முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கிறது ஈரான். பிரேசில் நாட்டில் அடுத்த ஆண்டு ஜூன் 16ம் தேதி போட்டிகள் தொடங்குகின்றன.

அர்ஜெனடினாவை வீழ்த்த வெறி

அர்ஜெனடினாவை வீழ்த்த வெறி

ஈரான் ரசிகர்கள் இப்போது அர்ஜென்டினாவைத்தான் குறி வைத்து விமர்சித்து வருகின்றனர். அர்ஜென்டினாவை வீழ்த்துவோம் என்று முழங்கி வருகின்றனர். அந்த அணியை மிக மோசமாக தோற்கடிப்போம் என்றும் வீராவேசத்துடன் கூறி வருகின்றனர்.

ஆன்லைனில் கடுப்புடன் கருத்துக்கள்

ஆன்லைனில் கடுப்புடன் கருத்துக்கள்

குறிப்பாக பேஸ்புக்கில் அர்ஜென்டினாவை கடுமையாக சாடியும் கருத்து சொல்லி வருகின்றனர். இதற்கு தனிப்பட்ட காரணம் என்ன என்பது புரியவில்லை.

மெஸ்ஸியை லஸ்ஸி போல கடையும் ரசிகர்கள்

மெஸ்ஸியை லஸ்ஸி போல கடையும் ரசிகர்கள்

குறிப்பாக அர்ஜென்டினா சூப்பர்ஸ்டார் லியோனல் மெஸ்ஸியைத்தான் அதிகம் விமர்சிக்கிறார்கள். தாறுமாறாக பேசுகிறார்கள். மெஸ்ஸியின் பேஸ்புக்கில் போய் ஆயிரக்கணக்கானோர் அவரை கடுமையாக திட்டி எழுதி வருகின்றனராம்.

ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழம்...

ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழம்...

மெஸ்ஸி என்றால் பெர்ஷிய மொழியில் தாமிரம் என்று பொருளாம். இதை வைத்து பலரும் அவரை கி்ண்டலடிக்கின்றனர். மெஸ்ஸி நீ ஒரு தாமிரம்... தங்கம் அல்ல.. என்று வாரி வருகிறார்கள்.

அர்ஜென்டினா ரசிகர்கள் கொதிப்பு

அர்ஜென்டினா ரசிகர்கள் கொதிப்பு

தங்களது தானைத் தலைவனை இப்படி ஈரான் ரசிகர்கள் கடுமையாக சாடுவதால் அர்ஜென்டினா ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். பதிலுக்கு ஈரானை விமர்சித்து அர்ஜென்டினா ரசிகர்கள் பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் சொல் விளையாட்டில் குதித்துள்ளனர்.

நல்ல ஈரானியர்களும் இருக்காங்கப்பா...

நல்ல ஈரானியர்களும் இருக்காங்கப்பா...

அதேசமயம் ஈரான் ரசிகர்கள்சிலர் மெஸ்ஸியை விமர்சிப்பதைக் கண்டித்துள்ளனர். இப்படிச் செய்வதால் ஈரான் மீதான துவேஷமே வளரும் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈரான் கால்பந்து சங்கம், வீரர்கள் வருத்தம், மன்னிப்பு

ஈரான் கால்பந்து சங்கம், வீரர்கள் வருத்தம், மன்னிப்பு

மெஸ்ஸியை இப்படி தங்களது நாட்டு ரசிகர்கள் விமர்சித்துள்ளதால், ஈரான் கால்பந்து சங்கம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதற்காக அது வருத்தமும், மன்னிப்பும் கேட்டுள்ளது. ஈரான் கால்பந்து வீரர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இது தவறானது என்றும் அவர்கள் கண்டித்துள்ளனர்.

அட,லிமா என்னப்பா பண்ணுச்சு...

அட,லிமா என்னப்பா பண்ணுச்சு...

அதேபோல பிரேசில் நாட்டு மாடல்அழகி பெர்னாண்டா லிமாவையும் பேஸ்புக்கில் ஈரான் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிரானவர்

இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிரானவர்

இவர் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிராக ஆடை அணிகிறார் என்று பலரும் அவரை விமர்சித்துள்ளனர்.

லிமா சீனுக்குக் கட்

லிமா சீனுக்குக் கட்

உலகக் கோப்பைப் போட்டியில் மோதும் அணிகளின் குரூப்பை முடிவு செய்யும் டிராவின்போது லிமாதான் உடன் இருந்தார். கவர்ச்சிகரமாக உடை அணிந்திருந்தார். அதை டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பினர். அப்போது லிமா வந்த காட்சிகளின் போது ஈரான் அரசு அந்தக் காட்சிகளை மட்டும் இருட்டடிப்பு செய்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 10, 2013, 13:46 [IST]
Other articles published on Dec 10, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+