Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற ஆர்வமுடன் காத்திருக்கும் கோவா அணி !!

கோவா : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கில் கால்பந்து போட்டிகளில் ஒரு பலமான தொடக்கத்தை கொடுத்த எஃப்சி கோவா அணி , புதன் கிழமை தனது சொந்த மண்ணான ஃபாடோர்டாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில், மும்பைக்கு எதிராக முதல் ஆட்டத்தை தொடங்குகிறது.

கடந்த இரண்டு போட்டிகளில் நான்கு புள்ளிகள் பெற்றுள்ள பயிற்சியாளர் செர்ஜியோ லோபரா தலைமையிலான கோவா அணி தற்போது மும்பை சிட்டி எஃப்.சி அணிக்கு எதிராக விளையாடுகிறது.

ISL 2018 - Goa and Mumbai match october 24 preview analysis

நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி. அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் கோவா அணி வெற்றி அடையவில்லை என்றாலும், சாம்பியன் பட்டம் வென்ற அணியான சென்னையின் எஃப்சி அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக மானுவெல் லாசர்ட்டோ இரண்டு போட்டிகளில் 5 கோல்கள் அடித்துள்ளார்.

கடந்த சீசனின் கோல்டன் பூட் வெற்றியாளரான ஃபேரான் கோரமினாஸ், அவ்வளவாக பிரகாசிக்கவில்லை. மூன்று போட்டிகளில் இரண்டு புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

[பெங்களூரு அசத்தல் வெற்றி.. புனே மீண்டும் மோசமான தோல்வி]

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பயிற்சியாளர் லோபிரோ, எதிர்தாக்குதல் நடத்தி விளையாடுவதுதான் எங்கள் அணியின் ஸ்டைல், அது தான் எங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். அதுதான் எங்களுக்கு முக்கியமானது. கடந்த ஆண்டு செய்ததைப் போலவே முயற்சி செய்து தாக்குதல் நடத்துவது எளிது என்றும் கோவாவில் , நடந்த கடந்த மூன்று போட்டிகளில் எஃப்சி கோவா அணி , மும்பை சிட்டி அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவியதை சுட்டிக்காட்டினார்.

இதே போல் மும்பை சிட்டி அணி இந்த சீசனில் எஃப்.சி. புனே அணியை எதிர் கொண்டு 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜார்ஜ் கோஸ்டாவின் தலைமையிலான இந்த அணி ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக விளையாடத் தொடங்கியது. பின்னர் கேரள பிளாஸ்டர்அணியுடன் விளையாடி 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்தனர்.

இது குறித்து மும்பை அணியின் பயிற்சியாளர் கோஸ்டா பேசும்போது, கோவா அணி மிகச் சிறந்த அணி. இந்த மைதானத்தில் அவர்கள் விளையாடும் போக்கு குறித்து நன்கு அறிந்து வைத்திருக்கிறேன். அவர்களுடனான இந்த விளையாட்டு கஷ்டமாக இருந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

அர்னால்டு லோகோசோவின் பிரேசில் ஸ்டைல் ஆட்டம் தற்போது கைகொடுக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். எப்படியும் கோவா அணியை வெற்றி பெறுவதே லட்சியம் என்றும் கோஸ்டா கூறினார்.

Story first published: Tuesday, October 23, 2018, 19:25 [IST]
Other articles published on Oct 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+