Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்களூரு அசத்தல் வெற்றி.. புனே மீண்டும் மோசமான தோல்வி

புனே : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து இன்றைய போட்டியில் பெங்களூரு அணி 3 -0 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி சூப்பர் வெற்றியைப் பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 15 ஆவது போட்டி எஃப்சி புனே அணிக்கும், பெங்களூரு எஃப்சி அணிக்கும் இடையே புனே ஸ்ரீ ஷிவ் சத்ரபதி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது.

டாஸ் வென்ற புனே அணி இடது புறத்தில் இருந்து தனது ஆட்டத்தைத் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்கள் வரை இரு அணிகளும் மிக மெதுவாக ஸ்வாரஸ்யம் இன்றி ஆடின.

[இதுக்கெல்லாம் பதில் இருக்கா? வெற்றிக்கு பின்னும் இந்திய அணியை விளாசும் முன்னாள் வீரர்]

மஞ்சள் அட்டை வாங்கிய புனே வீரர்

மஞ்சள் அட்டை வாங்கிய புனே வீரர்

ஆட்டத்தின் 10 ஆவது நிமிடத்திலேயே புனே அணியின் ஆஷிக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 15 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் மிக்கு பந்தை கோல் போஸ்ட்டை நோக்கி சிறப்பாக கடத்திச் சென்றார். ஆனால் இறுதியில் கோல் போடும் வாய்ப்பு நழுவிப்போனது. இரு அணியினரும் தொடர்ந்து விறுவிறுப்பாக ஆடி கோல் போட முயன்றனர். ஆனால் அந்த வாய்ப்பு ஆட்டத்தின் 41 ஆவது நிமிடத்தில்தான் கிடைத்தது.

பெங்களூரு இரண்டு கோல்கள்

பெங்களூரு இரண்டு கோல்கள்

பெங்களூரு அணியின் சுனில் ஒரு அற்புத கோல் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதையடுத்து மீண்டும் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அடுத்த 2 நிமிடத்தில் அதாவது 43 ஆவது நிமிடத்தில் அதே சுனில் மீண்டும் ஒரு கோல் போட்டு அசத்தினார். இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் பெங்களூரு அணி 2 -0 என்ற போல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

மூன்றாவது கோல்

மூன்றாவது கோல்

ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியதும் பெங்களூரு அணியின், ஹர்மன்ஜோத்துக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. புனே அணியில் இரண்டு வீரர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் மீண்டும் பெங்களூரு அணிக்கே அதிர்ஷ்டம் அடித்தது. 64 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் மிக்கு அருமையாக ஒரு கோல் அடித்து பெங்களூரு ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார். தொடர்ந்து பெங்களூரு மற்றும் புனே அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. புனே அணி தொடர்ந்து கோல் அடிக்க கடும் முயற்சி மேற்கொண்டது.

பெங்களூரு அணி வெற்றி

பெங்களூரு அணி வெற்றி

அப்போது ஆட்டத்தின் 79 ஆவது நிமிடத்தில் குர்பிரீத் சிங், புனே அணி வீரர் அடித்த பந்தை லாவகமாக தடுத்து நிறுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார். இறுதியில் 3 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. இறுதியில் பெங்களூரு அணி 3 -0 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, October 23, 2018, 19:14 [IST]
Other articles published on Oct 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+