Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்களூரு எஃப்சியை வழிநடத்துவது என் கடமை.. மூத்த வீரர் சுனில் சேத்ரி உறுதி!

பெங்களூரு : 2013 ஆம் ஆண்டு பெங்களூரு எஃப்சி அணி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை அந்த அணியும் வெற்றியும் இணை பிரியாமல் பயணம் செய்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு சீசனிலும் குறைந்தது ஒரு கோப்பையையாவது இந்த அணி பெற்றிருக்கிறது. மேலும் பெங்களூரு எஃப்சி அணி உள்நாட்டில் நடைபெற்ற போட்டிகளிலும் முத்திரை பதித்துள்ளது.

ISL 2019-20 : Sunil Chhetri aims to continue the legacy of Bengaluru FC in this season

கடந்த இரண்டு சீசன்களுக்கு முன்பு ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கில் போட்டிகளில் நுழைந்ததிலிருந்து, பெங்களூரு அணி உயர் தர ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

லீக் அட்டவணையில் முதலிடம் வகித்ததுடன் பட்டத்தையும் வென்ற ஒரே அணி அதுதான். கடந்த சீசனில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்று எஃப்சி கோவாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.

லீக் போட்டியின் வரலாற்றில் எந்த அணியும் வெற்றிகரமாக தங்களது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டதில்லை.

ஏ.டி.கே மற்றும் சென்னையின் எஃப்சி அணிகள் இதற்கு முன் இரண்டு முறை தோல்வியடைந்தன, ஆனால் இதுவரை கார்ல்ஸ் குவாட்ராட் தலைமையிலான பெங்களூரு எஃப்சி அணி சாதித்ததை இது வரை வேறு யாரும் சாதிக்கவில்லை என்பதை சவால் விட்டு சொல்லலாம்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பெங்களூரு எஃப் சி அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, நாங்கள் ஐஎஸ்எல் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்வது என்பது இந்த சீசனில் கடினமாக இருக்கும் என்பதை அறிவோம். முக்கியமாக, நாங்கள் மீண்டும் ஆசிய போட்டிக்கு வந்துள்ளோம், மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் நாங்கள் போட்டியிட்டு சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நிருபித்துள்ளளோம் என தெரிவித்துள்ளார். அதே போல் இந்த சீசனிலும் ஒரு சிறப்பான துவக்கத்தைக் கொடுத்து வெற்றி கணக்கை தொடங்க உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

இந்த சீசனில் இந்தியாவின் சர்வதேச வீரர் ஆஷிக் குருனியன், முன்னாள் சென்னை எஃப்சி அணியின் மிட்பீல்டர் ரபேல் அகஸ்டோ மற்றும் ஸ்பானிஷ் ஸ்ட்ரைக்கர் மானுவல் ஒன்வு ஆகியோருடன் பெங்களூரு அணி வலுவான நிலையில் உள்ளது. அது மட்டுமல்லாமல் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் சேத்ரி உள்ளிட்ட சிறந்த வீரர்கள் அந்த அணியில் இருப்பதால் சென்ற சீசனைப் போல் பெங்களூரு அணி மீண்டும் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றே தெரிகிறது.

இது குறித்து பேசிய சுனில் சேத்ரி, கடந்த 2013 ஆம் ஆண்டில் நான் பெங்களூரு அணிக்காக கையெழுத்திட்டபோது, அந்த அணி கோப்பைகளை வெல்ல உதவும் முயற்சியில் நான் முன்னிலை வகித்தேன். அதன்படி வெற்றிக் கோப்பையை பெற்று வருவதற்கான பொறுப்புடன் செயல்பட்டேன் என்றும் இந்த ஆறு ஆண்டுகளில் அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் கூறினார்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல் சில நேரங்களில் வெற்றி கைகூடாமல் போகிறது. அப்படித்தான் கடந்த 2017-18 சீசனில் பெங்களூரு எஃப்சி அணியின் கோட்டையான ஸ்ரீ காண்டீரவா ஸ்டேடியத்தில் சென்னை எஃப்சி அணிக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பின்னர் வெறுங்கையுடன் திரும்ப வேண்டியதாயிற்று.

கடந்த காலங்களில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஏ.டி.கே மற்றும் சென்னையின் எஃப்.சி போன்ற சாம்பியன் அணிகள் தோல்வி அடைந்துள்ளன. அது போல் அல்லாமல் கடந்த ஆண்டின் சாம்பியனான சுனில் சேத்ரியின் அணி மீண்டும் வெற்றி பெற்று சாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது

Story first published: Friday, October 11, 2019, 21:55 [IST]
Other articles published on Oct 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+