Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவங்க ஆடினாலே டிரா தான்.. ஏடிகே - கோவா மோதல்.. ஐஎஸ்எல் தொடரின் பரம வைரிகள்!

கோவா : பரம எதிரி அணிகளாக கருதப்படும் ஏடிகே மோகன் பகான் - எஃப்சி கோவா அணிகள் இடையே ஆன லீக் போட்டி கோவாவில் நடைபெற உள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 30வது லீக் போட்டியான இந்த ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் அணி வெல்லுமா? என கேள்வி எழுந்துள்ளது.

ISL 2020-21 : ATK Mohun Bagan vs FC Goa 30th match preview

ஏடிகே அணி முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. அதன் பின் ஒரு தோல்வி மற்றும் ஒரு டிரா செய்தது. தற்போது அந்த அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

அந்த அணியின் அட்டாக்கர் ராய் கிருஷ்ணா நல்ல பார்மில் இருப்பது அந்த அணிக்கு சாதகமான விஷயமாக உள்ளது.

கோவா அணி ஏடிகே அணிக்கு அப்படியே தலைகீழாக செயல்பட்டு வருகிறது. அந்த அணி முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தது. அடுத்த இரண்டு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. மீண்டும் ஒரு வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய காத்துக் கொண்டுள்ளது கோவா.

ஏடிகே - கோவா அணிகள் இதுவரை ஐஎஸ்எல் தொடரில் 14 முறை மோதி உள்ளன. அதில் ஏழு போட்டிகள் டிரா ஆகி உள்ளன. ஏடிகே அணி 4 போட்டிகளிலும், கோவா 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில், இந்தப் போட்டியும் டிரா ஆகவே வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இரண்டு அணிகளும் நிச்சயம் ஒரீரு கோல்கள் அடிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இருந்தாலும் டிரா செய்யவே வாய்ப்பு அதிகம்.

Story first published: Wednesday, December 16, 2020, 19:31 [IST]
Other articles published on Dec 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+