For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏடிகே 3.. சென்னை 2.. ஐஎஸ்எல் தொடரை கலக்கிய 2 அணிகள்.. தடுத்து நிறுத்த யாருமே இல்லையா?

கோவா : இந்தியன் சூப்பர் லீக் தொடரில் ஆதிக்கம் செலுத்திய இரு அணிகள் ஏடிகே மற்றும் சென்னையின் எஃப்சி.

இதுவரை நடந்துள்ள ஆறு சீசன்களில் இந்த இரு அணிகளும் ஐந்து முறை கோப்பை வென்றுள்ளன.

இந்த நிலையில், ஏழாவது சீசனில் இந்த இரு அணிகளையும் எந்த அணியாவது தடுத்து நிறுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ISL 2020-21 : ATK won 3 titles while CFC won twice

2014இல் துவங்கிய இந்தியன் சூப்பர் லீக் தொடர் ஏழாவது சீசனை எட்டி உள்ளது. இந்த நிலையில், அதிக முறை கோப்பை வென்ற அணிகளை பற்றிய விவாதம் எழுந்துள்ளது.

2014, 2016 மற்றும் 2019-20 சீசன்களில் ஏடிகே அணி கோப்பை வென்றது. மூன்று முறை கோப்பை வென்ற ஒரே அணி கொல்கத்தா மட்டுமே. 2015 மற்றும் 2017-18 சீசன்களில் சென்னையின் எஃப்சி அணி வெற்றி பெற்றது.

2018-19 சீசனில் மட்டுமே இந்த இரண்டு அணிகளை தாண்டி பெங்களூரு எஃப்சி அணி கோப்பை வென்றது. கொல்கத்தா அணி இந்த சீசனில் மோகன் பகான் அணியுடன் சேர்ந்து ஏடிகே மோகன் பகான் அணியாக மாறி உள்ளதால் அந்த அணி இன்னும் வலுவாக மாறி உள்ளது.

சென்னையின் எஃப்சி அணி கடந்த சீசனில் துவக்கத்தில் மோசமாக ஆடினாலும் அதன் பின் வெற்றிகளை குவித்தது.

இந்த இரு அணிகளும் 2020-21 சீசனில் ஆதிக்கம் எழுதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு அணிகளை தடுக்கும் ஒரே ஆற்றல் பெங்களூரு அணிக்கே இருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அதற்கு காரணம், அந்த அணி அறிமுகமானது முதல் லீக் சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக உள்ளது. ஒரு முறை இறுதிப் போட்டி வரை தோல்வி அடைந்து, ஒரு முறை கோப்பை வென்றும் உள்ளது.

Story first published: Thursday, November 19, 2020, 17:33 [IST]
Other articles published on Nov 19, 2020
English summary
ISL 2020-21 : ATK won 3 titles while CFC won twice in ISL history.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+