Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு மேட்ச் கோட்டை விட்டாச்சு.. இப்ப என்ன பண்ணப் போறீங்க? ஹைதராபாத்தை சந்திக்கும் பெங்களூரு!

கோவா : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 9வது லீக் போட்டியில் பெங்களூரு எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் மோத உள்ளன. இந்த லீக் போட்டி கோவாவில் நடைபெற உள்ளது.

ஹைதராபாத் அணி கடந்த சீசனில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று இருந்த நிலையில், இந்த சீசனில் அந்த அணி தான் ஆடிய முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது.

ஒடிசா அணியை 1 - 0 என வீழ்த்தி வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி அதே நம்பிக்கையுடன் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது.

ISL 2020-21 : Bengaluru FC vs Hyderabad FC 9th match preview

பெங்களூரு எஃப்சி அணி தன் முதல் போட்டியில் கோவா அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி 2 - 0 என முன்னிலை பெற்றாலும், பின் பாதியில் மூன்று நிமிட இடைவெளியில் 2 கோல்களை விட்டுக் கொடுத்து ஏமாற்றம் அளித்தது.

வெல்ல வேண்டிய போட்டியை சமன் செய்து பின்னடைவை சந்தித்தது பெங்களூரு எஃப்சி அணி. இந்த நிலையில், ஹைதராபாத் எஃப்சி அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க உள்ளது அந்த அணி.

இந்த இரு அணிகளில் பெங்களூரு அணி தான் வலுவான அணியாக காட்சி அளிக்கிறது. ஆனாலும், ஹைதராபாத் அணி புதிய சீசனை வெற்றிகரமாக துவக்கி இருப்பதால் தன்னம்பிக்கையுடன் வலுவான பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்தப் போட்டி கோவாவில் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் நடைபெற உள்ளது. சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி துவங்க உள்ளது.

Story first published: Saturday, November 28, 2020, 17:57 [IST]
Other articles published on Nov 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+