Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பலமான பெங்களூரு.. சவால் விடும் ஜாம்ஷெட்பூர்.. பரபர ஐஎஸ்எல் மோதல்!

கோவா : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றில் பெங்களூரு எஃப்சி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் மோத உள்ளன.

இந்த சீசனில் பெங்களூரு அணி கடந்த சீசன்களைப் போல நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

அந்த அணி ஆடிய ஏழு போட்டிகளில் மூன்று, வெற்றிகள், மூன்று டிரா, ஒரு தோல்வி அடைந்துள்ளது. புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

ISL 2020-21 : Bengaluru FC vs Jamshedpur FC match preview

பெங்களூரு அணிக்கு கிலேய்டன் சில்வா மற்றும் சுனில் சேத்ரி நம்பிக்கை அளித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் இதுவரை மூன்று கோல்கள் அடித்துள்ளனர்.

ஜாம்ஷெட்பூர் அணி தொடர்ந்து ஆறு போட்டிகளில் தோல்வி அடையாமல் வலம் வந்தது. எனினும், கோவா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து இருந்தது. 2 - 1 என அந்தப் போட்டியில் தோல்வி அடைந்து இருந்தது ஜாம்ஷெட்பூர் அணி.

இந்த இரண்டு அணிகளும் ஆறு போட்டிகளில் மோதி உள்ளது. தற்போது இரு அணிகளும் நல்ல பார்மில் இருப்பதால் இந்த அணிகளுக்கு இடையே ஆன போட்டிக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனினும், பெங்களூரு அணியின் பலம், ஜாம்ஷெட்பூர் அணியிடம் உள்ளதா? என்பதே பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. அந்த அடிப்படையில் பெங்களூரு அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என சிலர் கூறி வருகின்றனர்.

ஜாம்ஷெட்பூர் அணியின் பயிற்சியாளர் ஓவன் கோயல் தங்கள் அணி வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் காத்துக் கொண்டுள்ளார்.

Story first published: Monday, December 28, 2020, 19:52 [IST]
Other articles published on Dec 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+