For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

14 நிமிடங்களில் 4 கோல்.. தெறிக்க விட்ட பெங்களூரு - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள்!

கோவா : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசனின் 27வது லீக் போட்டியில் பெங்களூரு எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் ஆறு வீரர்கள் கோல் அடித்து தெறிக்கவிட்டனர். போட்டியில் பெங்களூரு அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது.

ISL 2020-21 : Bengaluru FC vs Kerala Blasters FC 27th match result

இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் 1 - 1 என சமநிலையில் இருந்தன. இரண்டாம் பாதியில் 51வது நிமிடம் முதல் 65வது நிமிடம் வரை 14 நிமிட இடைவெளியில் நான்கு கோல்கள் அடிக்கப்பட்டன. அதில் பெங்களூரு அணி மட்டுமே மூன்று கோல்களை அடித்து அசத்தியது.

முதல் பாதியில் கேரளா அணியின் ராகுல் கேபி 17வது நிமிடத்தில் போட்டியின் முதல் கோலை அடித்தார். 29வது நிமிடத்தில் கிலெய்டன் சில்வா கோல் அடித்து பெங்களூரு அணியை சமநிலையை எட்டச் செய்தார்.

இரண்டாம் பாதியில் பெங்களூரு அணியின் எரிக் 51வது நிமிடத்திலும், டிமாஸ் 53வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கேரளா அணியின் ஜோர்டான் முர்ரே 61வது நிமிடத்தில் கோல் அடித்து 3 - 2 என்ற நிலைக்கு போட்டியை எடுத்துச் சென்றார்.

அப்போது பெங்களூரு அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கேரளாவின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் 65வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன் பின் 4 - 2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற பெங்களூரு கேரளா கோல் அடிக்காமல் பார்த்துக் கொண்டது. ஆட்ட நேர முடிவில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

Story first published: Monday, December 14, 2020, 11:26 [IST]
Other articles published on Dec 14, 2020
English summary
ISL 2020-21 : Bengaluru FC vs Kerala Blasters FC 27th match result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+