Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்வி மேல் தோல்வி.. மீளுமா பெங்களூரு? சவால் விடும் ஈஸ்ட் பெங்கால்!

கோவா : ஏழாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் தொடரில் பெங்களூரு எஃப்சி - எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோத உள்ளன.

பெங்களூரு அணி இந்த சீசனில் முதல் ஆறு போட்டிகளில் தோல்வியே அடையாமல் இருந்தது. மூன்று வெற்றிகள், மூன்று டிராக்களை செய்து இருந்தது.

ஆனால், கடைசியாக ஆடிய மூன்று போட்டிகளில் அந்த அணி தோல்விகளை சந்தித்து இருக்கிறது.

ISL 2020-21 : Bengaluru FC vs SC East Bengal preview

அந்த மூன்று தோல்விகளுக்கு பின் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரெட்-ஐ விடுவித்து இருக்கிறது பெங்களூரு அணி.

அவருக்கு பதிலாக அணியின் துணை பயிற்சியாளராக கடந்த சீசன்களில் செயல்பட்ட முன்னாள் இந்திய வீரர் நௌஷத் மூஸா பயிற்சியாளர் பணியை தற்காலிகமாக செய்து வருகிறார்.

அவர்களின் தாக்குதல் பாணி ஆட்டம் தான் சரியில்லை. அதை சரி செய்தால் பெங்களூரு அணி வெற்றிகளை குவிக்கும்.

ஈஸ்ட் பெங்கால் அணி தன் முதல் சீசனில் மோசமான துவக்கத்தை பெற்றது. முதல் ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகள், ஒரு டிரா மட்டுமே செய்தது.

ஆனால், கடைசி நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் மூன்று டிரா செய்து ஓரளவு முன்னேற்றத்தை காண்பித்துள்ளது.

அந்த அணியின் புதிய வீரர் பிரைட் எனோபாகாரே தான் ஆடிய முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு கோல்கள் அடித்து நம்பிக்கை அளித்துள்ளார்.

கடந்த போட்டிகளின் செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும் போது இரு அணிகளும் சம பலத்துடனே உள்ளன. இந்தப் போட்டி டிரா ஆக வாய்ப்பு உள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Story first published: Saturday, January 9, 2021, 19:07 [IST]
Other articles published on Jan 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+