For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய சூப்பர் லீக் : 2வது சிறப்பான அணி... வெளியான அணி விவரம்... ரசிகர்கள் உற்சாகம்

கோவா : இந்திய சூப்பர் லீக் தொடரில் இரண்டாவது சிறப்பான அணியாக உள்ளது சென்னையின் எஃப்சி அணி.

சென்னையின் எஃப்சி அணியின் வீரர்கள் குறித்த முழு விவரமும் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னையின் எஃப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் வரும் 24ம் தேதி கோவாவின் வாஸ்கோடகாமாவில் உள்ள திலக் மைதானத்தில் மோதவுள்ளன.

நாளை துவக்கம்

நாளை துவக்கம்

இந்திய சூப்பர் லீக் தொடரின் 7வது சீசன் நாளை துவங்கவுள்ளது. இதன் முதல் போட்டி கோவாவின் பாம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நாளை கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி மற்றும் ஏடிகே மோஹுன் பகன் அணிகளுக்கிடையில் இரவு 7.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

2 முறை கோப்பை வெற்றி

2 முறை கோப்பை வெற்றி

ஐஎஸ்எல் தொடரின் இரண்டாவது சிறப்பான அணியாக உள்ளது சென்னையின் எஃப்சி அணி. கடந்த 6 சீசன்களில் 2 முறை கோப்பையை இந்த அணி கைப்பற்றியுள்ளது. கடந்த தொடரிலும் இறுதிப்போட்டி வரை வந்து, ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்த அந்த அணி கோப்பையை கைநழுவ விட்டது.

சென்னையின் எஃப்சி அணி அறிவிப்பு

சென்னையின் எஃப்சி அணி அறிவிப்பு

ஐஎஸ்எல்லின் 7வது சீசன் நாளை துவங்கவுள்ள நிலையில் தன்னுடைய அணி வீரர்கள் குறித்த முழு விவரங்களை தற்போது சென்னையின் எஃப்சி வெளியிட்டுள்ளது. கோல் கீப்பர்களாக கரண்ஜித் சிங், விஷால் ரேவந்த், சமிக் மித்ரா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். டிபன்டர்களாக எலி சபியா, லால்சுவான்மாவியா பனாய், தீபக் தாங்க்ரி உள்ளிட்ட வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தன்பால், அபிஜித் இடம்பிடிப்பு

தன்பால், அபிஜித் இடம்பிடிப்பு

இதேபோல மிட் பீல்டர்களாக அனிருத் தாபே, ரபேல் கிரிவெலாரோ, தன்பால் கணேஷ், ஜெர்மன்பிரீத் சிங், அபிஜித் சர்க்கார், ஸ்ரீனிவாசன் பாண்டியன், அமான் சேத்ரி உள்ளிட்டோர் உள்ளனர். பார்வர்ட்சில் இஸ்மாயில் கான்கால்வ்ஸ், ஜாக்கப் சைல்வெஸ்டர் மற்றும் ரஹிம் அலி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Story first published: Thursday, November 19, 2020, 18:04 [IST]
Other articles published on Nov 19, 2020
English summary
Chennaiyin FC will begin their ISL 2020-21 campaign on November 24 against Jamshedpur FC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+